‘நான் அப்படி நடிக்க மாட்டேன்னு சொல்லிடேன்’ ஆதி குணசேகரன் ரோலில் நடிக்க வேல ராமமூர்த்தி போட்டுள்ள கண்டிஷன்.

0
261
- Advertisement -

எதிர்நீச்சல் மாரிமுத்து குறித்து நடிகர் வேலராமமூர்த்தி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினிக்கு திருமணம் ஏற்பாடுகளை ஆதி குணசேகரன் செய்து கொள்கிறார். உமையாளின் மகனுடன் நிச்சயதார்த்தம் என்று சொல்லி கல்யாணம் செய்ய ஏற்பாடு யாருக்கும் தெரியாமல் பண்ண முடிவெடுக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் உமையாளின் மகனை கதிர் கடத்தி வைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் ஜனனி, அவருடைய அம்மா, தங்கையை உமையாளின் அடியாட்கள் கடத்தி வைத்திருக்கிறார்கள். இனிவரும் நாட்களில் தர்ஷினி திருமணம் நடக்குமா? ஜனனியை சக்தி காப்பாற்றுவாரா? ஆதி குணசேகரனின் உண்மையான முகம் தெரிய வருமா? போன்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் வேலராமமூர்த்தி.

- Advertisement -

வேலராமமூர்த்தி குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் வேலராமமூர்த்தி. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திரம், வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக மதயானை கூட்டம் என்ற படத்தில் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். தற்போது இவர் எதிர்நீச்சல் சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கிறார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் மாரிமுத்து தான் நடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு தான் திடீரென்று மாரடைப்பால் இறந்துவிட்டார்.

வேலராமமூர்த்தி பேட்டி:

பின் அவருக்கு பதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், கொம்பன் படத்திலிருந்து தான் எனக்கும் மாரிமுத்துவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் சேர்ந்து எட்டு படங்கள் பண்ணியிருக்கிறோம். கடைசியாக வீராயி மக்கள் என்ற படத்தில் நாங்கள் இருவரும் அண்ணன் தம்பியாக நடித்திருந்தோம். அது ஒரு சின்ன பட்ஜெட் படம். அதனால் ஒரே ஓட்டலில் தான் தங்கி, ஒரே காரில் தான் ஷூட்டிங் வந்தோம். அப்படி இருக்கும் போது ஒருநாள் காரைக்குடியில் ஷூட்டிங்களுக்காக சென்றிருந்தேன். அப்போதுதான் மாரிமுத்து இறந்ததாக தகவல் வந்தது.

-விளம்பரம்-

மாரிமுத்து குறித்து சொன்னது:

என்னோட உதவியாளர் சொன்னதிலிருந்தே என்னால் நடிக்க முடியவில்லை. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நடிகனாக மட்டுமில்லை மாரிமுத்து அற்புதமான கலைஞர். என்னை விட 17 வயது கம்மியானவர். அவர் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டும். எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து நடித்த ஒரு எபிசோடை கூட நான் பார்த்ததில்லை. ஆனால், அவர் என்னிடம் பேசும்போது எல்லாம் எதிர்நீச்சல் சீரியலை பற்றி தான் பேசிக் கொண்டே இருப்பார்.

எதிர்நீச்சல் சீரியல் குறித்து சொன்னது:

சூட்டிங் செல்லும் இடத்தில் எல்லாம் அவரிடம் நிறைய பேர் மக்களெல்லாம் செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். குழந்தைகளெல்லாம் அழைத்து எதிர்நீச்சல் சீரியல் பார்க்கிறாயா? இல்லையா? என்று கேட்பார்.இது கொஞ்சம் பில்டப் என்று நினைத்தேன். ஆனால், அந்த அளவிற்கு அந்த சீரியல் மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நான் வந்த பிறகு தான் கதையில் ஓவர் வில்லத்தனமாக வைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் என்னுடைய ஸ்டைலில் தான் நடிப்பேன் என்று சொல்லிவிட்டேன். இந்த சீரியலில் நான் நடிப்பது பெரிய சவாலாகத்தான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement