விஜய் வாங்கும் பாதி சம்பளம் கருப்பு பணம் தான்..!எஸ் ஏ சி உதவி இயக்குனர் பரபரப்பு பேட்டி..!

0
186
Vijaysac

துணை இயக்குனரும் அதிமுக செயலாளருமான அன்பழகன் ,விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரிடம் ரசிகன், தேவா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும், காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழன்.

naanjil anbazagan

எஸ் ஏ சி மற்றும் விஜயுடன் மிகுந்த நெருங்கிய உறவில் இருந்து வந்த அன்பழன் பின்னர் சில கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார். தற்போது அ.தி.மு.க.வின் கலைப்பிரிவு இணையச்செயலாளகவும் அதிமுக நட்சத்திர பேச்சாளரராகவும் இருந்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அன்பழனிடம் விஜய்யின் சர்கார் படம் குறித்து கேட்கப்பட்டது. அந்த கேள்வியை கேட்டதும் கொஞ்சம் ஆக்ரோஷத்துடன் பதிலளித்த அன்பழன், எஸ்.ஏ.சி.யின் உதவி இயக்குநராக இருந்த வகையில் அவர்கள் இருவரின் நிஜ முகங்களும் எனக்கு நன்றாக தெரியும். விஜய்யை அரசியலில் அவரை இறக்கி எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என்று பேராசைப்படுகிறார்.

எங்கள் கட்சியை பற்றியும் அரசாங்கத்தை பற்றியும் இவ்வளவு வாய் கிழிய பேசும் விஜய் என்ன அந்த அளவிற்கு உத்தமரா? வாங்கும் சம்பளத்தில் 40% மட்டுமே கணக்கில் வரக்கூடிய வெள்ளைப் பணம் மீதி அனைத்தும் கருப்பு பணம் தான். இதை அவர் இப்போதல்ல பல ஆண்டுகளாக செய்து வருகிறார். இப்படி பட்ட விஜய் அரசாங்கத்தை குறை கூறுவதா என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.