தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும், தொலைக்காட்சி நடன இயக்குனரும் ஆவார். இவர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர். 1998 ஆம் ஆண்டு இருந்து சினிமாவில் சமுத்திரகனி இருந்து வருகிறார். இவர் புகழ் பெற்ற இயக்குனர் கே. பாலச்சந்தரன் இடம் துணை இயக்குனராக பணி புரிந்தவர். பின் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியில் படங்களை இயக்கியுள்ளார். ஆனால், அதற்கு முன்னால் 2001 ஆம் ஆண்டு பார்த்தாலே பரவசம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுத்து வருகிறார் சமுத்திரகனி. இவரது படங்கள் எப்போதும் சமூகத்திற்கு கருத்து சொல்லும் வகையில் இருக்கும். இவர் நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா என கிட்டத்தட்ட 10 படங்களை இயக்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அதோடு தன்னுடைய நடிப்பிற்கும், தான் இயக்கிய படங்களுக்கும் நிறைய விருதுகளை வாங்கி உள்ளார்.
இதையும் பாருங்க : எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு விஜய் என்று தான் பெயர் வைப்பேன்- இளம் நடிகை பேட்டி.
நடிகர் சமுத்திரக்கனி அவர்கள் ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகன் ஹரி விக்னேஸ்வரன், மகள் சிவானி உள்ளார்கள். இந்நிலையில் நடிகர் சமுத்திரகனியின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகிய குடும்பத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால், அவரோட பெற்றோர்கள் பற்றி யாருக்கும் தெரியாது. தற்போது சமூக வலைத்தளங்களில் சமுத்திரக்கனியின் அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது தான் சமுத்திரகனியின் அப்பா ,அம்மாவா என்றும் கேட்டு வருகிறார்கள். சமீபத்தில் சசிகுமார்— சமுத்திரகனி கூட்டணியில் மீண்டும் நாடோடிகள் 2 படம் வெளிவந்தது. இந்த படத்தில் பரணி, அஞ்சலி, அதுல்யா ரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் அவர்கள் இசை அமைத்து உள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படத்தை நந்தகோபால் அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.