எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு விஜய் என்று தான் பெயர் வைப்பேன்- இளம் நடிகை பேட்டி.

0
9660
Vijay

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் பிகில். இந்த படம் உலக அளவில் சாதனை படைத்தது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் விஜய் அவர்கள் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஒருவர் தனக்கு குழந்தை பிறந்தால் அதற்கு விஜய் என்று தான் பெயர் வைப்பேன் என்று பேட்டியில் கூறியுள்ளார்.

Image result for rashmika mandanna .

- Advertisement -

தற்போது அவர் கூறிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் விஜய்க்கு மக்கள் மட்டும் ரசிகர்களாக இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் ரசிகராக திகழ்ந்து வருகிறார்கள். அதிலும் விஜய் பற்றி பல பேட்டிகளில் வெளிப்படையாக தங்களுக்குத் தோன்றிய விஷயங்களையும் கூறியிருக்கிறார்கள். அந்த வரிசையில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகையாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. “இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் இவர் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதையும் பாருங்க : ஷாக்கிங் நியூஸ் : இந்தியன் 2 படப்பிடில் ஏற்பட்ட விபத்தில் மருமகனை இழந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன்.

-விளம்பரம்-

பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர் தற்போது தமிழ்,தெலுங்கு,கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் பற்றி கூறி இருந்தார். அதில் அவர் கூறியது, எனக்கு சிறுவயதில் இருந்தே விஜய் மீது ஒரு க்ரேஸ் இருக்கிறது. எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு விஜய் என்று தான் பெயர் வைப்பேன் என்று வெளிப்படியாக ராஷ்மிகா கூறியிருக்கிறார். இவர் பேசிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement