மெர்சல் படமே காபின்னு கோர்ட் வரைக்கும் போனாங்க – தன் மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து அட்லீ.

0
336
Atlee
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார். மேலும், இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். மேலும், இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஜவான் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. இந்த படம் இதுவரை 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களில் இந்த படம் இடப்பிடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு நீண்ட நாட்களுக்கு பின்னர் அதிரடியான படம் இந்தியில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி இருந்தார்கள்.

விஜய்- ஷாருக்கான் கூட்டணி:

இதனை அடுத்து அட்லி அவர்கள் விஜய்- ஷாருக்கான் கூட்டணியில் படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காப்பி குறித்த சர்ச்சைக்கு அட்லீ கொடுத்து இருக்கும் விளக்கம் தான் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அட்லீ எந்த படம் எடுத்தாலுமே அதை காபி என்று தான் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். ராஜா ராணி- மௌன ராகம் படத்தின் காப்பி, தெறி- சத்ரியன் படத்தின் காப்பி, மெர்சல்- அபூர்வ சகோதரர்களின் காப்பி என்று நெட்டிசன்களும், விமர்சகர்களும் விமர்சித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அட்லீ பேட்டி:

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த ஜவான் படம் கூட ஹாலிவுட் படங்களிலிருந்து எடுக்கப்பட்ட காப்பி, விஜய் இதற்கு முன்பு நடித்த மெர்சல் ,சர்கார் போன்ற படங்கள், அஜித்தின் ஆரம்பம் போன்ற பல படங்களில் பாணியில் இருந்தது என்றெல்லாம் கிண்டல் அடித்திருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அட்லீ சமீபத்தில் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் எப்போதுமே வேண்டும் என்று எந்த ஒரு படத்தையும் காப்பி அடிக்கவில்லை. ஆனால், ஒரே மாதிரியான கருத்துகள் பல படங்களில் இருப்பது இயல்பான ஒன்றுதான்.

காப்பி குறித்த சர்ச்சை:

காதல் படங்கள், போலீஸ் கதை கிராமப்புற கதைகள் என்று பல பிரிவுகளில் நான் சரியாக வேலை செய்தாலும் அதை என்னை மட்டும் தாக்கிய விமர்சனங்கள் வைக்கிறார்கள். அதேபோல் நான் ஷாருக்கானையும் விஜயம் வைத்து டபிள் ஹீரோ படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறேன். அதற்கான சூழல் அமைந்தால் என்னுடைய அடுத்த படம் ஷாருக்கான்- விஜய் கூட்டணியில் தான் அமையும். ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகியோரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் என்னால் படம் இயக்க முடியும். அதற்கான திறமை என்னிடம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement