பள்ளிகளில் இப்படி செய்யும் தாமு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ப்ளூ சட்டை மாறனின் ஆவேச பதிவு

0
521
- Advertisement -

காமெடி நடிகரான தாமு மறைந்த குடியரசு தலைவரின் சிறந்த மாணவன் என்றும் கூறலாம். அப்துல் கலாமின் சிந்தனைகளை மட்டுமல்ல செயல்களையும் ‘லீட் இந்தியா ‘ என்ற அமைப்பின் மூலம் மாணவர்களிடன் கொண்டு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கி வருகிறார். காமெடி நடிகரான தாமு எண்ணெற்ற படங்களில் பல முன்னனி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக இவரை திரைப்படங்களில் பெரிதாக காண முடிவதில்லை.

-விளம்பரம்-

இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதிலும் இவர் பேசும் பேச்சுக்களை கேட்டு மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களே கண்கலங்கி அழுகிறார்கள்.தாமுவின் இந்த பேச்சுக்களுக்கு ஆதரவு ஒரு பெரும் வந்தாலும் அதே போல மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்காமல் அவர்களை ஏதோ குற்றவாளிகளை போல அழவைத்து பார்ப்பது அவர்களின் மனநிலை கெடுக்கும் என்று ஒரு சிலரும் விமர்சனம் செய்தான் வருகிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் தாமு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘மாணவிகளை அழ வைத்து போலியான எமோஷனை கிளறிவிடும் இந்த நடிகர்.. இனி பள்ளி, கல்லூரி மேடைகளில் பேசுவதை தடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.இதற்கான நடவடிக்கையை தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் உடனே எடுக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுஒருபுற இருக்க தாமுவின் இந்த பேச்சுக்கள் குறித்து பள்ளி கல்வித்துறை கூறியிருப்பது, நடிகர் தாமு அரசு பள்ளிகளுக்குள் வந்து மாணவர்களிடம் பேசுவதற்கு பள்ளிக்கல்வித்துறையிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை.அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். அதன் பிறகு நடிகர் தாமுவை அழைத்து அரசு பள்ளியில் நிகழ்ச்சி நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

-விளம்பரம்-

பள்ளி ஆசிரியர்களும் காவல்துறையும் தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தன்னை அழைத்ததாக தாமு சொல்லி இருக்கிறார். ஆனால், தாமு தான் ஆசிரியர்களிடமும் பள்ளி மாணவர்களிடமும் ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.பள்ளி மாணவர்களிடம் யாரை அழைத்துப் பேச வைக்க போகிறோம் என்பதை முடிவு செய்வதற்கு தெளிவான விதிகள் இருக்கின்றது.

அந்த விதிகளை ஆசிரியர்கள் பின்பற்றவில்லை. நிறைய ஆசிரியர்களுக்கு அந்த விதிகள் இருப்பதே தெரியவில்லை. பள்ளி மாணவர்களிடம் பேசுவர்கள் தேர்வு எழுத்தாளர்களும், சாதனையாளர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை நாப்பது வருடங்களுக்கு முன்பே விதிகள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் பள்ளி மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால், காவல்துறை பள்ளி மாணவர்களிடம் யார் பேச வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்கள்

Advertisement