அட்லீ-விஜய் புதிய படத்தின் டைட்டில் இதுவா?செம மாஸ் போங்க..!

0
395

நடிகர் விஜய் தற்போது ஏ ஏர் முருகதாஸ் இயக்கத்தில் “சர்கார்” படத்தில் நடித்துள்ளார். வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிற்கும் இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார் அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் அட்லீ.

Atle

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்ற தகவலும் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மூன்றாவது முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் அட்லீ சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

அப்போது அவரிடம் நீங்கள்அடுத்து இயக்க போகும் படத்தில் விஜய் முதலமைச்சராக நடித்தால் படத்திற்கு என்ன தலைப்பை வைப்பீர்கள் என்று கேள்வி கேட்ப்பட்டுளள்து. அதற்கு அட்லீ சற்றும் யோசிக்காமல் “ஆளப்போறான் தமிழன்” என்று தான் வைப்பேன் என்று கூற அங்கிருந்த அனைவரும் ஆரவாரம் செய்தனர். ஒருவேளை அட்லீ விஜயை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தின் டைட்டில் இதுவாக இருந்தாலும் மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.