சமீப காலமாக விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார்.
இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இதனை அடுத்து விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியான புஸ்ஸி தலைமையில் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார்.
இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். விஜய்யின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து இயக்குனர் சேரன் பதிவிட்டுள்ளார். சேரன் கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திருமணம் படத்தை இயக்கி இருந்தார்.
அதற்குப் பிறகு இவர் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறார். தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் ஜர்னி என்ற வெப்சீரிஸ் ஒன்று ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு பெரிய பதவிக்கு 5 பேர் போட்டியிடும் கதை தான் இந்த ஜர்னி. இந்த வெப் தொடரில் ஆரி ஒரு காட்சியில் ‘”யார் ஒருத்தர் வேட்பாளருக்கு செலவு பண்ண வர்றேன்னு சொல்லறாங்களோ, பின்னாடி நம்மகிட்ட எதையோ எதிர்பார்கிறாங்கன்னு அர்த்தம்.
அவங்களை கிட்ட சேர்த்தா நாம மக்களை விட்டுட்டு அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்” என்ற வசனத்தை பேசி இருப்பார். இப்படி ஒரு நிலையில் இந்த வசனத்தை பகிர்ந்த சேரன் ‘ இனிமேல் இந்த மாதிரி காட்சிகள் எப்படத்தில் வந்தாலும் புதிதாக கட்சி ஆரம்பிக்கும் விஜய் போன்றவர்களுக்கு அனுப்பினால் முதலிலேயே தங்களின் கட்சி உறுப்பினர்களை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தும்.. #JOURNEY எதை செய்யக்கூடாது என்ற தெளிவு அவசியம்’ என்று பதிவிட்டுள்ளார்.