கருப்பா இருக்கிற நாம வெள்ளையா காட்டிக்க நினைப்பதால் தான் – அண்ணாச்சிக்கு அட்வைஸ் சொன்ன பிரபல இயக்குனர்.

0
635
Legend
- Advertisement -

தி லெஜன்ட் சரவணனின் செல்பி புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தி லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. தனது சொந்தக் கடை விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள்.

-விளம்பரம்-
Thelegend

இவர் தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார். இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே படநிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

தி லெஜன்ட் படம்:

மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, விவேக், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள்.

தி லெஜன்ட் படம் விமர்சனம்:

அதிக எதிர்பார்ப்புடன் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகி இருந்தது. தமிழில் தயாரான இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி பான் இந்திய படமாக மாறி இருக்கிறது. இந்த படத்தில் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் சரவணன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் படத்தின் அருள் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

தி லெஜண்ட் படத்தின் வசூல் :

தி லெஜண்ட் படத்தின் வசூல் குறித்த விவரத்தை சமீபத்தில் நடிகர் சரவணன் அருள் வெளியிட்டு இருக்கிறார். அதாவது, இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 45 கோடி ரூபாய். திரையரங்கில் கிடைத்த வசூல் மட்டும் 45 கோடி ரூபாய். சாட்டிலைட் உரிமையை 20 கோடி, ஓடிடி உரிமையை 25 கோடிக்கும் விற்பனை செய்ய தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் இந்த படத்தின் மூலம் 45 கோடி லாபம் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சரவணன் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார்.

சரவணன் அருள் செல்பி புகைப்படம்:

அந்த படமும் கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக பல இயக்குனர்களிடம் சரவணன் கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி போட்டோவை பதிவிட்டிருக்கிறார் சரவணன் அருள். இதை பார்த்து பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அந்த வகையில் மூடர் கூட இயக்குனர் நவீன், லெஜென் சரவணன் போட்டோவை பகிர்ந்து, உங்கள் தன்னம்பிக்கை தான் உங்கள் பலம் அண்ணாச்சி. நீங்கள் தான் லெஜன்ட் அதை நம்புங்கள். உங்கள் இயற்கை நிறத்தை நீங்களே மதிக்கலனா எப்படி? கருப்பா இருக்கிற நாம வெள்ளையா காட்டிக்க நினைப்பதால் தான் வெள்ளையா இருக்கிறவன் தான் ஒசத்தி என்கிறான் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement