போன படம் சரியா போய் சேரலன்னு அவருக்கு புரிஞ்சது – லெஜண்ட் உடனான படம் குறித்து கருடன் பட இயக்குனர்

0
427
- Advertisement -

கருடன் பட இயக்குனர்- லெஜண்ட் சரவணன் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக துரை செந்தில்குமார் இருக்கிறார். இவர் வெற்றிமாறன் இடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த ‘எதிர்நீச்சல்’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கியிருந்தார். மேலும், இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முக கொண்டவர். அந்த வகையில் கடந்த ஆண்டு சூரி-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகியிருந்த ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தில் எழுத்தாளராக துரை செந்தில்குமார் பணியாற்றி இருந்தார். அதற்குப் பின் சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியாகி இருந்த கருடன் படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார்.

- Advertisement -

துரை செந்தில்குமார் திரைப்பயணம்:

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்நிலையில் துரை செந்தில்குமார்- லெஜெண்ட் சரவணன் கூட்டணியில் உருவாகும் புது படம் குறித்து தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கருடன் படத்தை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கும் புது படத்தில் ஹீரோவாக லெஜண்ட் சரவணன் நடிக்க இருக்கிறார்.

துரை செந்தில்குமார்- லெஜெண்ட் சரவணன் கூட்டணி:

இது தொடர்பாக வெளியாகியிருக்கும் புகைப்படத்தில் லெஜன்ட் சரவணன் மாஸான லுக்கில் கையில் துப்பாக்கியுடன் மிரட்டல் போஸ் கொடுத்திருக்கிறார். முதல் படத்திற்கும் இந்த படத்திற்கும் அவர் லுக்கில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மேலும், இது தொடர்பாக அளித்த பேட்டியில் துரை செந்தில்குமார், இருவருமே பேசிக் கொண்டிருக்கோம். அவருக்கு போன படம் நினைத்த மாதிரி சரியாக அமையவில்லை. நான் அவரிடம் சொன்னபோது சில விஷயங்கள் அவருக்கு புரிந்தது.

-விளம்பரம்-

துரை செந்தில்குமார் பேட்டி:

இது எல்லாம் யாருமே என்னிடம் சொல்லவில்லை. நாம் ஒரு படம் பண்ணலாம் என்று சொன்னார். அப்போ நான் ஒரு ஐடியாவை சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது. கூடிய வரவில்லையே இந்த படம் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். இவர் படங்களில் நடிக்கும் ஆசையில் தானே படநிறுவனத்தை உருவாக்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார்.

சரவணன் நடித்த படம்:

இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் கீத்திகா திவாரி, பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, வெங்கட், மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இருந்தும் விடாமுயற்சியுடன் சரவணன் நடித்து வருகிறார்.

Advertisement