சிவகார்த்திகேயன் உடன் படம் பண்ணாததற்கான காரணம் இது தான் என்று இயக்குனர் எழில் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் எழில். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. விஜயின் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமாக அறியப்பட்டார்.
அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவர் 2012 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த ‘மனம் கொத்தி பறவை’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் ஆத்மியா ராஜன், சூரி, இளவரசு, சிங்கம்புலி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
எழில் பேட்டி:
இந்தப் படத்திற்கு பின் இயக்குனர் எழில்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் எந்த படமும் வெளிவரவில்லை. இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் எழில், மனம் கொத்தி பறவை படத்திற்கு பிறகு நாங்கள் படம் பண்ணவில்லை. காரணம், நான் ஒரு ₹5 லட்சம் செக் போட சொல்லி கொடுத்தேன். அந்த சமயம் பார்த்து சில பேர் செக் கொடுத்ததுக்காக சிவகார்த்திகேயனுக்கு பிரஷர் கொடுத்திருந்தார்கள்.
சிவகார்த்திகேயன் உடன் பண்ணாத காரணம்:
அவரும் என்ன என்னவோ செய்தார். பெரிய பிரச்சினையே நடந்து கொண்டிருந்தது. அதனால்தான் அவருடன் படம் பண்ணவும் முடியவில்லை. அந்த சமயம் பார்த்து அவர் ஏதோ பெரிய சிக்கலில் மாட்டி இருந்தார். பின் நான் விமலை வைத்து ‘தேசிங்கு ராஜா’ படத்தை எடுத்தேன். அந்த சமயம் பார்த்து நான் பணம் கொடுத்து தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டால் என்ன பண்ணுவது என்று நான் விட்டுவிட்டேன். அப்படியே நானும் படங்களில் பிஸியாக இருந்தேன். அவரும் மற்ற இயக்குனர்களின் படங்களில் பிஸியாக இருந்தார். அப்படியே பாதை மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார்.
சிவகார்திகேயன் குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். மேலும், கடைசியாக ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘அயலான்’ படத்தில் இவர் நடித்து இருந்தார்.
சிவகார்திகேயன் நடித்த படம்:
இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து இவர் சில படங்களில் நடித்து வருகிறார்.