இயக்குனர் ஹரி வீட்டில் நேர்ந்த பேரிழப்பு – பெரும் சோகத்தில் குடும்பத்தினர். ரசிகர்கள் ஆறுதல்.

0
284
hari
- Advertisement -

பிரபல இயக்குனர் ஹரியின் தந்தை காலமாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர் லிஸ்டில் இயக்குனர் ஹரிக்கு நிச்சயம் ஒரு தனி இடம் இருக்கிறது. இவருக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவின் மீது அதிக ஆர்வம் இருந்தது. இதனால் இவர் முதலில் இயக்குனர் செந்தில்நாதன், ஜீவபாலன், அமீர்ஜான், நாசர் உட்பட பல பேரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

-விளம்பரம்-

அதற்குப் பின்னர் தான் இவர் இயக்குனர் ஆனார். இவர் இயக்கிய சாமி, கோவில், ஆறு, சிங்கம் போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. ஆனால், சமீப காலமாக இவர் இயக்கிய ஒரு சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும், சிங்கம் படத்தை மூன்று பாகங்கள் இயக்கிய இருக்கிறார். அதே பாணியில் இறுதியாக 2018 ஆம் ஆண்டு சாமி 2 படத்தை இயக்கி இருந்தார். ஆனால், முதல் பாகம் அளவிற்கு இந்த படம் வெற்றி பெறவில்லை. இவர் சிறிய இடைவெளிக்கு பின் யானை படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருந்தார்.

- Advertisement -

ஹரி திரைப்பயணம்:

இந்த படத்தில் ஹரியின் மச்சன் அருண் விஜய் தான் ஹீரோவாக நடித்து இருக்கிறார். மேலும், இந்த படம் கமர்ஷியல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்தது என்பது குறிபிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது விஷால் நடிக்கும் 34 வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது.

ஹரி- விஷால் கூட்டணி:

மேலும், இந்த படம் வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஹரி- விஷால் கூட்டணியில் தாமிரபரணி, பூஜை படங்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்று தந்திருந்தது. இதனை அடுத்து மூன்றாவது முறையாக விஷால்- ஹரி கூட்டணி இணைந்து இருக்கிறது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

இயக்குனர் ஹரியின் தந்தை மரணம்;

இந்த நிலையில் இயக்குனர் ஹரியின் தந்தை இறந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவருடைய தந்தையின் பெயர் வி ஆர் கோபாலகிருஷ்ணன். தற்போது அவருக்கு 88 வயதாகிறது. கடந்த சில மாதங்களாகவே இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். இவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்:

மேலும், இவர் தூத்துக்குடியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்திருந்தார். தற்போது இவர் தன்னுடைய மகன் ஹரி – மருமகள் ப்ரீத்தா உடன் தான் வசித்து இருக்கிறார். தற்போது இவருடைய உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். அதற்கு பிறகு இவருடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்கு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் ஹரிக்கு திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement