20 நாளுக்கு முன் தடுப்பூசி, இறந்த பின்னர் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்று – கே.வி.ஆனந்த் மரணத்துக்குக் காரணம் என்ன ?

0
1749
kvAnand
- Advertisement -

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் இன்று (ஏப்ரல் 30) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புகைப்பட பத்திரிகையாளரான இவர் ஆரம்ப காலத்தில் கல்கி இந்தியா டுடே போன்ற பல்வேறு தேசிய பத்திரிகைகளில் வேலை செய்திருக்கிறார். பின்னர் இவருக்கு சினிமா மீது ஏற்பட்ட ஆசையால் பிரபல ஒளிப்பதிவாளரான பி சி ஸ்ரீராம் இடம் உதவியாளராக சேர்ந்திருக்கிறார். பிசி ஸ்ரீராமிடடம் பணியாற்றியபோது பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் ‘தென்மாவின் கொம்பத்’ என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பிசி ஸ்ரீராமை அணுகியிருக்கிறார்.அப்போது அவரால் அந்த படத்தை ஒப்புக் கொள்ள முடியவில்லை என்று கே வி ஆனந்தை சிபாரிசு செய்து அந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஆக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு கேவி ஆனந்த் இருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.கே வி ஆனந்த் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என்று 14 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களாக முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களுக்கு கே வி ஆனந்த்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

இதையும் பாருங்க : போடா டே, நாங்க தான் நம்பர் 1 – பாத் ரூம் டூர் வீடியோவை கழுவி ஊற்றியவர்களுக்கு அர்ச்சனா கொடுத்த செம பதிலடி.

- Advertisement -

தொடர்ந்து ஒளிப்பதிவாளராக இருந்த கே வி ஆனந்த், பின்னர் இயக்குனராக களமிறங்கினார். இவர் முதன்முதலில் இயக்கிய படம் 2005ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் பிரித்திவிராஜ் கோபிகா நடிப்பில் வெளியான கனா கண்டேன் திரைப்படம் மூலம் தான் அதன் பின்னர் அயன் கோ மாற்றான் அனேகன் காப்பான் போன்ற பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார்.இப்படி ஒரு நிலையில் இவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கே.வி.ஆனந்த் சென்னை அடையாறில் தன் அம்மா, மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்துவந்தார். இதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப்பெற்றுவந்திருக்கிறார்கள். அதே போல கே வி ஆனந்த் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது கொரோனா நெகட்டிவ் என்று தான் வந்துள்ளது.

-விளம்பரம்-
Image

இப்படி ஒரு நிலையில் நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் அவரே காரை எடுத்து சென்று மருத்துவனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை காலமாகி இருக்கிறார்.கே வி ஆனந்திற்கு கொரோனா தொற்று இருந்துள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கொரோனா தொற்று அவருக்கு இருந்ததால் அவரது உடல் வீட்டுக்குப்போகாது. மருத்துவமனையில் இருந்து நேரடியாக மாநகராட்சி மூலம் அடக்கம் செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement