ஒரு சின்ன முத்தம், இதற்காகவா பயப்படனும்னு கேள்வி கேட்ட பலருக்கு இந்த உண்மை செய்தியும் தெரியனும் – மோகன்.ஜி பகிர்ந்த சம்பவம்

0
420
Mohan
- Advertisement -

திருச்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-
Mohan

இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும், இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

- Advertisement -

இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்து இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சமீபத்தில் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பகாசூரன். இந்த படத்தில் நட்டி நடராஜன், ராதாரவி, vj லயா என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருந்தார்.சமூகத்தில் பெண்கள் பாலியில் தொழிலில் எப்படி சிக்குகிறார்கள், செல் போன்கள் மற்றும் சமுக வலைத்தளத்தினால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது போன்றவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பிற்போக்குத்தனமான கருத்துக்களை குறித்தும் இந்த படம் பேசி இருந்ததாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் செய்தி ஒன்றை கூறியிருக்கிறார். அதில் அவர், திருச்சி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியும், டிப்ளமோ படிக்கும் மாணவனும் காதலித்து வந்திருக்கின்றார்கள். இருவருமே அடிக்கடி சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மாணவி தற்கொலை:

அப்போதெல்லாம் இருவரும் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மாணவியின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவன் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்த மாணவியின் அம்மா அவரை கடுமையாக கண்டித்து இருக்கிறார். இதனால் மணமுடைந்த மாணவி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறார். பின் அந்த மாணவியை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து இருந்தார்கள்.

நெட்டிசன்கள் கருத்து:

ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி இறந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முசிறி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. ஒரு சின்ன முத்தம், இதற்காகவா பயப்படனும் என்ற கேள்வி கேட்ட பலருக்கு இந்த உண்மை செய்தி தெரியணும். இன்னும் இது போல பெண்கள் சமூகத்தில் இருக்கிறார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். ஆனால், இயக்குனர் மோகன் ஜி பதிவிற்கு, குடும்பத்தினர் அந்த பெண்ணை கண்டித்ததனால் தான் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement