அவர் இவ்வளவு உயரத்துக்கு வந்தும் இன்னும் ஏன் அது ஒழியல – இளையராஜா எம்.பி. பதவி குறித்து சீமான் காட்டமான பதில்.

0
550
Seeman
- Advertisement -

புகழின் உச்சிக்கு போன இளையராஜாவுக்கே இந்த நிலைமை தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொந்தளித்து அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது . தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர், நடிகராக திகழ்பவர் சீமான். அதோடு இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பல ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறார். மக்களின் நலன் கருதி இவர் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-
seeman

இப்படி இவர் அரசியலில் பிஸியாக இருந்தாலும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சீமான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் முந்திரிக்காடு. தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சீமான் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை மு களஞ்சியம் இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் சீமான் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

- Advertisement -

சீமான் அளித்த பேட்டி:

அதில் அவர், முந்திரி காடு திரைப்படம் ஒரு திரை இலக்கியம். மனிதன் சிந்தனைக்குள் இருக்கிற ஜாதி ஏற்றத்தாழ்வு, உயர்வு தாழ்வு என்ற எண்ணங்கள் போகவில்லை. அதை மையமாக வைத்து தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. படம் பார்க்கும்போது அனைவருக்கும் இந்த படம் ஒரு வலியைத் தரும். இந்த படத்தின் மூலம் ஜாதிய சிந்தனை என்ற உளவியல் நோயிலிருந்து ஒரு தலைமுறை விடுபடுவார்கள் என்று நம்புகிறேன். அதற்கு இந்த படம் வழி வகுக்கும். இந்த படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மாட்டுக்கறி குறித்து சொன்னது:

நாகரீகம் அடைந்த நாடுகளில் முதன்மையான உணவு என்ன தெரியுமா? பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற எல்லா நாடுகளிலும் மாட்டுக்கறி தான் சாப்பிடுவார்கள். இந்திய நாட்டில் அதிகமாக மாட்டு கறியை ஏற்றுமதி செய்கிறார்கள். அதிலும், இஸ்லாமிய- கிறிஸ்தவ நாடுகளுக்கு தான் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது. நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன். நான் நகர்புறத்திற்கு வந்த பிறகு மாட்டுக்கறி எடுக்கிறேன். அது விலை குறைந்த உணவு. ஊட்டமான உணவு. உழைக்கும் மக்களுக்கு அதிக வலுவை சேர்க்கிற உணவு.

-விளம்பரம்-

சாதி குறித்து சொன்னது:

இங்கே எல்லோரும் தான் சாப்பிடுகிறார்கள். கேரளாவில் அனைவரும் சாப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தான் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் என்று சொல்லக்கூடாது. ஆடு, கோழி சாப்பிடுவீங்க, அவ்வளவு பெரிய மாடு சாப்பிட மாட்டீங்களா? இட ஒதுக்கீடு வந்தது பொருளாதார அளவுகோலுக்காக இல்லை. பொருளாதார அளவில் என்பது ஏற்றத்தாழ்வுக்கு குறியது. நான் ஏழையாக இருக்கிறேன் என்றால் ஒரு பத்து ஆண்டுகளில் அம்பானி அதானியாக மாறிட முடியும். ஆனால், இன்றைக்கு பறையனாக இருக்கிறவர் எவ்வளவு பெரிய பணக்காரர் ஆனாலும் அவன் பறையன் தான்.

இளையராஜா குறித்து சொன்னது:

சொல்லப்போனால், இளையராஜாவின் இசைக்கு ஈடு இணையே இல்லை. அவர் ஒரு இசை மேதை. ஆனால், ராஜ்யசபா பதவி கொடுக்கும்போது என்ன சொன்னீர்கள்? ஈடு இணையற்ற இசைக் கலைஞருக்கு கொடுக்கிறோம் என்று சொல்லவில்லை. ஒரு தலித்திற்கு கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். இவ்வளவு உயரத்திற்கு இளையராஜா வந்த பிறகும் சாதி ஒழியவில்லை என்றால் அதை எந்த செருப்பை வைத்து அடிப்பது. அப்போ நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், இசைஞானி இளையராஜாவிற்கு கடந்த ஆண்டு எம் பி பதவி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கு வழங்கும்போது பிஜேபி அறிவிப்பில் ஒரு தலித் மற்றும் செயின் சாதியை சேர்ந்தவர்களை தேர்வு செய்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

Advertisement