அழகாக காட்டும் Profile Picture வைக்காதிர்கள் – மோகன் ஜி பேச்சு. அதற்கு அவர் சொன்ன காரணம்.

0
409
- Advertisement -

சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பெண்கள் பற்றி இயக்குனர் மோகன் ஜி பேசியுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தான் இவர் இயக்கிய பகாசுரன் படம் வரும் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பகாசூரன் படக்குழு சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

பகாசூரன் வாத்தி ஒரே நாளில் :

அந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் ஜி பகாசூரன் படத்தில் பெண்களுக்கு செல்போன்களினால் ஏற்ப்படும் ஆபத்துகள் குறித்து இந்த படத்தில் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய மோகன் ஜி “நடிகர்களை வைத்து படங்கள் எடுப்பதை விட இயக்குனர்களை வைத்து படம் இயக்குவது மிகவும் எளிதாக இருக்கிறது. பகாசூரன் படம் வாத்தி பத்துடன் ஒன்றாக வெளியாகிறது. ஒரு படத்தை பட்ஜெட் மட்டுமே வைத்து எடை போடுவது தவறான விஷயம். அதில் குறப்பிடம் கருத்தை மட்டுமே ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கூறினார்.

-விளம்பரம்-

அழகான புகைப்படம் வைக்காதிர்கள் :

மேலும் பேசிய மோகன் ஜி பெண்கள் சோசியல் மீடியாக்களில் தங்களை அழகாக காட்டும் புகைப்படங்களை புரொஃபைல் பிச்சராக வைப்பதை தவிர்க்க வேண்டும் அப்படி வைப்பது தான் பிரச்சனையின் ஆரம்ப புள்ளி. அந்த இடத்தில் இருந்து தான் நீங்கள் மற்றவர்களால் டார்கெட் செய்யப்படுவீர்கள் என்று கூறினார். இவரின் இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் இவரை பூமார் ஜி என்றும், கடுமையான திட்டி விமர்சித்தும் வருகின்றனர்.

Advertisement