சினேகாவிடம் மன்னிப்பு கேட்டார் மோகன் ராஜா, ஏன் என்ன ஆயிற்று?

0
2754

இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவாகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளிவந்த படம் வேலைக்காரன். இந்த படத்தில் நடிகை சினேகா ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து இருந்தார். அந்த கேரக்டர் தான் படத்தின் திருப்புமுனை கேரக்டர் என்று கூட சொல்லலாம். ஆனால், படத்தில் மொத்தமாக சேர்த்து பிட்டு பிட்டாக 5 நிமிடம் தான் வந்திருக்கிறது என சினேகா வருத்தம் கொண்டார்.

sneha

- Advertisement -

இதற்காக 18 நாட்கள் நடித்து கொடுத்தேன். என் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி நடித்தேன். ஆனால் படத்தில் மொத்தம் 5 நிமிடம் மட்டுமே என்னுடைய காட்சிகள் வந்தது. இதற்கு முன்னர் எந்த ஒரு படத்திலும் என்னை இப்படி அவமானபடுத்தியது இல்லை. என மிகவும் வருத்தம் கொண்டிருந்தார் சினேகா.

-விளம்பரம்-

தற்போது இது குறித்து விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்கிறேன் எனக் கூறியுள்ளார் இயக்குனர் மோகன்ராஜா.

சினேகாவின் சில காட்சிகள் நீக்கப்பட்டது எங்கள் எல்லோருக்கும் வருத்தம் தான். யாரையும் நாங்கள் ஏமாற்ற நினைக்கவில்லை. அவரது காட்சிகள் மட்டும் 90 நாள் நடப்பதாக இருந்தது. ஆனால் வேறு வழியின்று காட்சிகள் கட் செய்யப்பட வேண்டியதாயிற்று. அவரது முகத்திலும் நிறைய மாறுதல்கள் காட்ட வேண்டி இருந்தது.

Velaikkaran

அவரது காட்சிகள் மட்டும் இன்றி வேறு சிலரின் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது, அதிலும் எங்களுக்கு வருத்தம் தான். நாங்கள் தவறு செய்திருப்பதாக சினேகா கருதினால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், எனக் கூறினார் இயக்குனர் மோகன்ராஜா.

Advertisement