தளபதி 62, மீண்டும் ஒரு முறை ‘மெர்சல்’ மேஜிக் ! இசையமைப்பாளர், நடிகை, எடிட்டர் !

0
1274
Mersal
- Advertisement -

மெர்சல் படத்தை தொடர்ந்து தந்து 62ஆவது படத்திற்கு தனது பேவர்ட் இயக்குனர் முருதாசுடன் கைகோர்த்துள்ளார் விஜய். தற்போது படத்திற்கான ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு கேரக்டர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த பல மாதங்களாக வந்த இசையமைப்பாளர் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. மெர்சல் படத்தினை போன்று இந்த படத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது இந்த செய்தி உறுதியாகி உள்ளது. விஜய்-62வில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.

- Advertisement -

மேலும், விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க நயன்தாரா, தீரன் படத்தில் நடித்த ரகூல் ப்ரீத் சிங் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வுள்ளனர். அதேபோல், படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிறிஸ் கங்காதரன், எடிட்டராக துப்பாக்கி படத்திற்கு எடிட் செய்த ஸ்ரீகர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement