ஜெயம் ரவி குடும்பத்தில் இருந்து மற்றுமொரு ஹீரோ.!யார் தெரியுமா.!

0
634
jayam-ravi-family

பிரபல எடிட்டர் மோகனின் வாரிசுகளான மோகன்ராஜாவும், ரவியும் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்த நிலையில், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரையம் கவர்ந்தார்.

தற்போது அவரைத் தொடர்ந்து இயக்குநர் மோகன்ராஜாவின் மகன் பிரணவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார். இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளார்.

- Advertisement -

திமிரு புடிச்சவன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் படம் தமிழரசன். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 18)தொடங்கியது. விஜய் ஆண்டனி நடிக்கும் இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ப்ரனவ் மோகன் அறிமுகமாகும் முதல் படமாகும். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.