முடிவை அவளே பார்த்து கொள்வாள் – திரௌபதி முத்தம் என்ற பாடல் தலைப்பிற்கு இயக்குனர் மோகனின் ஆவேச பதிவு.

0
54119
mohan
- Advertisement -

கர்ணன் படத்தின் மூன்றாம் பாடலில் ‘திரௌபதி முத்தம்’ என்று குறிப்பிட்டு வெளியான அறிவிப்பு அடுத்து, இதுகுறித்து திரௌபதி இயக்குனர் மோகன் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ்.கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. தற்போது ஜாகமே தந்திரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என்று படு பிசியாக நடித்து வரும் தனுஷ், பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் இசையமைத்து உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : பாவாடை மட்டும் கட்டிக்கொண்டு நடித்துள்ள பிகில் பட நடிகை வர்ஷா – சிங்கபெண்ணா இப்படி ?

- Advertisement -

இந்த பாடலை தொடர்ந்து . ‘ஏ ஆளு பண்டாரத்தி’ என்று துவங்கும் பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடலை தேவா பாடி இருந்தார். கண்டா வரச் சொல்லுங்க பாடலை போல இந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கர்ணன் படத்தில் இருந்து மூன்றாவது பாடலுக்கான அறிவிப்பு நேற்று (மார்ச் 9) வெளியானது. இந்த பாடலுக்கு திரௌபதி முத்தம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலின் அறிவிப்பு வெளியானதில் இருந்து பலரும் ‘திரௌபதி’ இயக்குனர் மோனை டேக் செய்து கேலி செய்து வருகின்றனர். திரௌபதி படம் வெளியான போது, அது தலித் மக்களை குறிப்பிட்டு தாக்கி எடுத்தது போல இருந்தது என்று பல சர்ச்சைகள் எழுந்தது. தற்போது ‘திரௌபதி முத்தம்’ என்ற தலைப்பில் கர்ணன் பாடல் வெளியாக இருப்பதும் கொஞ்சம் பேசும் பொருளாக மாறியுள்ளது.

-விளம்பரம்-

இப்படி இந்த விவகாரம் குறித்து மறைமுகமாக ட்வீட் ஒன்றை போட்டுள்ள மோகன், அவரவர் எண்ணம் போல் அவரவர் வாழ்க்கை அமையும். அவரவர் சிந்தனை போல அவரவர் செயல்கள் அமையும்.. அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்.. அக்னி தாய்க்கும் அப்படித்தான்.. யாரலும் அசுத்த படுத்த முடியாது.. உங்கள் செயலுக்கான முடிவை அவளே பார்த்து கொள்வாள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement