கதாநாயகனாக களமிறங்கும் இயக்குனர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா. இவரை வைத்து படம் இயக்கம் இயக்குனர் யார் தெரியுமா??

0
248
- Advertisement -

இயக்குனர் முத்தையாவின் மகன் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் எம் முத்தையா. இவர் விருதுநகரைச் சேர்ந்தவர். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைகதை ஆசிரியருமாவார். கடந்த 2013 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளிவந்த குட்டிப்புலி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பேரை வாங்கி தந்தது. அதனை அடுத்து இவர் கார்த்தியை வைத்து கொம்பன் என்ற படத்தை எடுத்திருந்தார். இந்தப் படத்தில் லட்சுமி மேனன், ராஜ்கிரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் விஷாலை வைத்து மருது, மீண்டும் சசிகுமாரனை வைத்து கொடிவீரன், கௌதம் கார்த்தியை வைத்து தேவராட்டம், விக்ரம் பிரபுவை வைத்து புலிக்குத்தி பாண்டி போன்ற பல படங்களை இயக்கியிருந்தார்.

- Advertisement -

முத்தையா திரைப்பயணம்:

பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். பின் இவர் நடிகர் கார்த்தியை வைத்து விருமன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுக நடிகை அதிதி சங்கர் நடித்தார். இவர் வேற யாரும் இல்லைங்க பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ராதிகா உட்பட பலர் நடித்தார்கள்.

முத்தையா இயக்கிய படங்கள்:

இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும், கடைசியாக முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியிருந்த படம் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம். இந்தப் படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை சித்தி இத்தானி நடித்திருந்தார். இவர்களுடன் படத்தில் ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதரன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

-விளம்பரம்-

முத்தையா மகன் ஹீரோவாக நடிக்கும் படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. இந்த நிலையில் இயக்குனர் முத்தையா தன்னுடைய மகனை வைத்து இயக்கும் படம் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. முத்தையாவின் மகன் விஜய் முத்தையா. தற்போது முத்தையா இயக்கும் புது படத்தில் தான் ஹீரோவாக அவருடைய மகன் விஜய் முத்தையா நடிக்கிறார்.

படம் குறித்த அப்டேட்:

மதுரையை கதைக்களமாக வைத்து அந்த படத்தை முத்தையா இயக்குகிறார். இந்த படத்தினுடைய பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது. தற்போது இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement