கமல் படத்தின் கதை குறித்து இயக்குனர் பா ரஞ்சித் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
பா.ரஞ்சித்தின் திரைப்பயணம்:
சமீபத்தில் வெளிவந்த ரைட்டர் படத்தை இவர் தான் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி உள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரஞ்சித்-விக்ரம் கூட்டணி:
இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். தற்போது விக்ரம் 61ஆவது திரைப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். சமீபத்தில் தான் இதற்கான பூஜை நடைபெற்றது. இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பிற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும். மேலும், பிரிட்டிஷார் காலத்தில் நடந்த கதையை கொண்டதாக இந்த படம் உருவாக்கப்படுகிறது.
கமல்-ரஞ்சித் கூட்டணி:
படத்தின் சூட்டிங் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் கே ஜி எஃப்பில் நடைபெறும் என பா ரஞ்சித் கூறியிருந்தார். இந்த நிலையில் கமல் நடிக்க உள்ள படத்தை குறித்து பா ரஞ்சித் அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விக்ரம் படத்தை முடித்துவிட்டு கமல் நடிக்கும் படத்தை பா ரஞ்சித் இயக்குகிறார். இந்த படம் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். கமலை இயக்கும் படத்துக்கான கதையை ரஞ்சித் முழுவதுமாக எழுதவில்லை.
கமல் நடிக்கும் படம்:
விக்ரம் படத்தின் பணிகள் முடிந்ததும் கமலிடம் கதையை விவரிக்க உள்ளார் ரஞ்சித். அதே போல்
லோகேஷின் விக்ரம் படத்திற்குப் பிறகு கமல் அவர்கள் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த படத்தை முடித்துவிட்டு தான் ரஞ்சித்- கமல் கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.