‘கேஜிஎப் தொகுதியை நம்ம தான் காப்பாத்தனும்’ கர்நாடக தேர்தல் வாக்கு சேகரிப்பில் களமிறங்கிய பா.ரஞ்சித்.

0
329
Paranjith
- Advertisement -

கேஜிஎப் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்று கர்நாடக தேர்தலில் பா ரஞ்சித் களம் இறங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் வரும் மே மாதம் பத்தாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஏப்ரல் 24ஆம் தேதி என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும், பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. கர்நாடகாவில் 2.62 கோடி ஆண் வாக்காளர்கள், 2.59 கோடி பெண் வாக்காளர்கள். ஆக மொத்தம் 5.21 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். மொத்தம், கர்நாடகாவில் 224 தொகுதிகளை கொண்டிருக்கிறது. இதில் 36 தனித்தொகுதிகளும் 15 பழங்குடியினர் தொகுதிகளும் இருக்கிறது.

- Advertisement -

கர்நாடக தேர்தல்:

இதில் தமிழ்நாட்டை ஒட்டி உள்ள எல்லைப் பகுதிகளான மாண்டியா, கோலார், பெங்களூரு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது. இதனால் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் கே ஜி எஃப் எனப்படும் கோலார் தங்க வயல் பகுதியில் இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் ராஜேந்திரன் போட்டி இடுகிறார்.

பா.ரஞ்சித் வீடியோ:

இந்நிலையில் இவருக்கு தமிழர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இயக்குனர் பா ரஞ்சித் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக பா ரஞ்சித் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், கேஜிஎப் தமிழ் மக்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக ராஜேந்திரன் போட்டியிடுகிறார். ஏற்கனவே நம்மிடம் இருந்ததை நாம் இழந்து வருகிறோம். இறந்ததை திரும்ப கைப்பற்றி ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

-விளம்பரம்-

தேர்தல் குறித்து சொன்னது:

இது கே ஜி எஃப் தமிழர்களுக்கு இருக்கிறது. நம்மிடம் உள்ள பலத்தை மீண்டும் நிரூபிக்க முக்கியமான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது. இந்த முறை அண்ணனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும். நம்முடைய அரசியல் உரிமைகளை பெற சட்டமன்றம் அனுப்ப வேண்டிய தேவை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி பா ரஞ்சித் வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பா.ரஞ்சித் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித்.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். கடைசியாக இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது இவர் விக்ரமை வைத்து படம் இயக்கி வருகிறார்.

Advertisement