24 மணி நேர பலத்த போலீஸ் பாதுகாப்பில் பொம்மன்-பெள்ளி – என்ன காரணம் தெரியுமா?

0
422
Bomman
- Advertisement -

ஆஸ்கர் விருது வென்ற பொம்மன்-பெள்ளி தம்பதியினருக்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை காட்டில் இருக்கும் யானைகளை வைத்து தான் The Elephant Whisperers என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு யானை குட்டிகள் கொண்டு வரப்பட்டது. இதை அங்கு உள்ள பொம்மன்- பெள்ளி என்ற தம்பதிகள் வளர்த்தார்கள்.

-விளம்பரம்-

இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் The Elephant Whisperers. இவர்கள் இந்த யானை குட்டிகளை எப்படி எல்லாம் பராமரிக்கிறார்கள்? அதன் மீது எப்படி அன்பு செலுத்துகிறார்கள்? என்பது தான் The Elephant Whisperers படத்தின் கதை. இந்த படம் 2022 ஆம் ஆண்டு நெட்ப்ளிக்சில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படத்தை பெண் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படம் குறித்து பல பிரபலங்கள் பாராட்டி இருந்தார்கள்.

- Advertisement -

The Elephant Whisperers படம்:

அதுமட்டும் இல்லாமல் The Elephant Whisperers படத்திற்காக சமீபத்தில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் எடுத்த இந்த குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. இது இந்தியாவிற்கு மட்டும் இல்லாமல் தமிழகத்திற்கும் பெருமையை சேர்த்திருக்கிறது. மேலும், இந்த ஆவணப்படம் தற்போது உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் நடித்த பொம்மன் மற்றும் பெள்ளிக்கு பல இடங்களில் இருந்து பாராட்டுக்கள் வந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் இந்த தம்பதியை நேரில் அழைத்து பாராட்டி 1 லட்சம் காசோலை வழங்கி சிறப்பித்தார்.

பிரதமர் மோடி வருகை:

அதோடு இவர்களை பாராட்டும் வகையில் மும்பையில் விழா ஓன்றும் நடந்தது. ஆகவே, உலகம் முழுவதும் பொம்மன்-பெள்ளி தம்பதியினர் பிரபலமானார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இடம்பெற்ற யானை ரகு, பொம்மிக்கும் மக்கள் மத்தியில் இடம் கிடைத்திருக்கிறது. இவர்களை காண பலரும் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் பொம்மன்-பெள்ளி தம்பதியினருக்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி ஏப்ரல் 9 ஆம் தேதி வருகை தர இருக்கிறார்.

-விளம்பரம்-

போலீஸ் பாதுகாப்பு:

ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் மசினகுடி நகரத்திற்கு பிரதமர் மைசூர் விமான நிலையத்திலிருந்து வருகிறார். பின்பு சாலை வழியாக தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்ல இருக்கிறார். இதற்காக மசினகுடி முதல் தெப்பக்காடு வரை சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். மேலும், தெப்பக்காடு முகாமில் யானைகள் பராமரிக்கும் முறைகள், அதற்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும் பாகன்களிடம் பிரதமர் கலந்துரையாட இருக்கிறார்.

பாதுகாப்பில் பொம்மன்-பெள்ளி:

அது மட்டும் இல்லாமல் பிரதமர் ஆஸ்கர் விருது பெற்ற தம்பதியினர் பொம்மன்- பெள்ளி ஆகியோரையும் சந்தித்து அவர்களை கௌரவிக்கவும் இருக்கிறார். இந்த நிலையில் பொம்மன்- பெள்ளி தம்பதியினரை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதால் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அவர்களுக்கு போடப்பட்டிருக்கிறது. இந்த தம்பதியினை சந்திக்க வரும் சுற்றுலா பயணிகளையும் தீவிரப் சோதனைகளுக்கு பிறகு தான் அனுமதிக்கின்றார்கள்.

Advertisement