தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆகவும், 543 பேர் பலியாகியும் உள்ளார்கள். நாளுக்கு நாள் ஒட்டுமொத்த உலகமும் கொரோவினால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவால் பொது இடங்கள், கடைகள், தியேட்டர், கோவில்கள், போக்குவரத்து என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். மேலும், கொரோனாவால் பல நிகழ்வுகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையும் பாருங்க : மூன்றரை வயதில் இறந்த தங்கை. சிறு வயதில் தனது குடுப்பதுடன் விஜய். அறிய புகைப்படம் இதோ.

Advertisement

ஊரடங்கு நாளில் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர் மேலும் வீட்டில் வேறு வழி இல்லாமல் எதையாவது செய்து பொழுதை கழித்து வருகிறார்கள் அந்த வகையில் பிரபல இயக்குனரான பேரரசு தனது மகளை வைத்து முடியை வெட்டிக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார் இதுவரை தனது மகளின் புகைப்படத்தை பதிவிட பேரரசு தற்போது லண்டனில் தனது செல்ல மகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னொரு காலத்தில் பிரபல இயக்குனராக கொடி கட்டி பறந்தவர் இயக்குனர் பேரரசு. மேலும், இவர் ஆட்டம், பாட்டம், சண்டை, பாசம், நகைச்சுவை, ஆக்ஷன், அதிரடி வசனங்கள் என்று மசாலாவாக படங்களை தருவதில் வல்லவர். அதுமட்டும் இல்லாமல் இவருடைய பட பெயர்கள் எல்லாமே ஊர் பெயர்களை கொண்டிருக்கும். அதை வைத்தே எளிதாக இவரை கண்டுபித்து விடலாம்.

இதையும் பாருங்க : 1000 ரூபாய்க்கு வாங்கி திருட்டு தனமாகமது விற்பனை. கையும் களவுமாக சிக்கிய நடிகர்.

Advertisement

அதோடு தான் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் சிறு வேடங்களில் தோன்றி நடிப்பார். இவர் திருப்பாச்சி, சிவகாசி, தர்மபுரி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் படங்களை இயக்கி உள்ளார். தளபதி விஜய் வைத்து மட்டும் சிவகாசி, திருப்பாச்சி என்ற இரண்டு மாஸ் படங்களை இயக்கினார். இறுதியாக 2012 ஆம் ஆண்டு திருத்தணி படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் தமிழில் எந்த படத்தையும் பேரரசு இயக்கவில்லை.

Advertisement
Advertisement