1000 ரூபாய்க்கு வாங்கி திருட்டு தனமாகமது விற்பனை. கையும் களவுமாக சிக்கிய நடிகர்.

0
68697
Draupathi

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வெளி வந்த திரைப்படம் ‘திரௌபதி’. இந்த படத்தினை இயக்குநர் மோகன்.ஜி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ரிச்சர்ட் ரிசி நடித்திருந்தார். மேலும், ஷீலா ராஜ்குமார், கருணாஸ், லேனா, ஜீவா ரவி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் முக்கிய ரோலில் ரிஸ்வான் என்பவர் நடித்திருந்தார்.

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இதையும் பாருங்க : நடிகர் யோகி பாபுவின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறிந்திடாத விஷயம்.

- Advertisement -

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. ‘144’ போடப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கிறதாம். இருப்பினும் அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரியின் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் என்பவரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சட்ட விரோதமாக மதுபானம் விற்று வந்தவர்களை கைது செய்து வந்தனர். இந்நிலையில், ‘திரௌபதி’ படத்தில் நடித்த நடிகர் ரிஸ்வான் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்றதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

30 வயதான நடிகர் ரிஸ்வான் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டில் 12 பீர் பாட்டில்கள் மற்றும் 57 குவார்ட்டர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்திருக்கிறார். ரிஸ்வானிடம் இருந்த மதுபானங்கள் மற்றும் ரூ.2300 பணமும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதாம். நடிகர் ரிஸ்வானை விசாரிக்கையில், சினிமா புரொடக்ஷன் வேலை செய்யும் பிரதீப் மற்றும் அவரது வாகன ஓட்டுனர் தேவராஜ் ஆகிய இருவர் பற்றிய தகவலை கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தேவராஜ் வீட்டிற்கு போலீஸ் செல்ல, அவரது காரில் 189 குவார்ட்டர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்திருக்கிறார். பின், தேவராஜிடம் இருந்த மதுபானங்கள், அவரது கார் மற்றும் ரூ.20,000 பணமும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதாம். பிரதீப்பின் வாகன ஓட்டுனர் தேவராஜிடம் இருந்து ரூ.1000-த்திற்கு வாங்கும் குவார்ட்டர் பாட்டிலை ரூ.1200-க்கு தனது சினிமா நண்பர்களுக்கு நடிகர் ரிஸ்வான் விற்று வந்திருக்கிறார் என விசாரித்தபோது போலீஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

Advertisement