விஜயகாந்த் மகன்கள் மீது நம்பிக்கை வரவில்லை, ஆனால் சின்ன விஜயகாந்தா விஜய் – ரஜினியின் ரசிகர் இயக்குனர் பிரவீன் காந்தி

0
401
- Advertisement -

விஜய் அரசியல் குறித்து இயக்குனர் பிரவீன் காந்தி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள்.

-விளம்பரம்-

தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 129 பேர் வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது. இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம் :

இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறது.
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள். விஜய் அவர்கள் திரைத்துறையை தாண்டி அரசியலிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள். இதற்காக சினிமாவின் மூலம் ஏராளமான ரசிகர்களை விஜய் தன்வசம் படுத்தி வருகிறார். அதனின் முக்கிய படியாக தான் கட்சி தொண்டர்களாக மாற்றி இருக்கிறார் என்றும் கட்சி வேலைகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் விஜய் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

விஜய் அரசியல்:

சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார். இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்னும் சில தினங்களில் விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் உடைய அரசியல் வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகிக்கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

பிரவீன் காந்தி பேட்டி :

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் பிரவீன் காந்தி பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர், விஜய் அரசியல் வருவதற்கு இதுதான் சரியான நேரம். அவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு எப்படி செயல்படலாம் என்று என்னை கேட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஏதேனும் ஒரு கட்சியை ஆதரிக்கலாம். வேணும் என்றால் பிரச்சாரம் கூட செய்யலாம். இங்கு சரியான ஆளில்லை. விஜய் கண்டிப்பாக வரவேண்டும். அவருக்கென்று ஒரு வசீகரம் இருக்கிறது. சுமாரான படத்தை 400 கோடி வரை வசூல் செய்திருக்கிறது என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். ஜெயிலரை விட முந்த வேண்டும், அஜித்தை வழக்கம் போல ஜெயிக்க வேண்டும், அரசியலுக்கு வர வேண்டும் என்றால் வெற்றி தேவை.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

இந்த மூன்று காரணங்களுக்காக விஜய் ரசிகர்கள் அந்த படத்தை ஓட வைத்தார்கள். அதேபோல் விஜயகாந்துக்கு இப்படி ஒரு கூட்டம் வரும் என்று எதிர்பார்த்தார்களா? விஜய் சின்ன விஜயகாந்த்தா வர வாய்ப்பு இருக்கிறது. விஜயகாந்த் மகன்கள் மீது அனைவரும் கவனம் திரும்பி உள்ளது. அது அன்பு தான் தவிர நம்பிக்கை வரவில்லை. அதற்கு இன்னும் 10, 15 ஆண்டுகள் ஆகலாம். உதயநிதி ஸ்டாலின் எல்லாம் பத்தாது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களுக்கு பிடிக்கனும் அல்லது பணத்தை திணிக்கனும். எத்தனை நாளைக்கு பணத்தை திணிப்பீர்கள்? விஜய் சொன்னாலே போதும் 2047 ஆம் ஆண்டு இந்தியா வல்லரசு ஆகும் என்று சொல்றாங்க. அதோட ஆரம்பப் புள்ளி தமிழனா தான் இருப்பாங்க. விஜய் தன்னுடைய புகைப்படத்தை முன்னிலைப்படுத்த மாட்டார். அவரின் அரசியல் வருகை சாதாரணமாக இருக்காது. 2031-ல் 40, 50 சீட் கேட்டு கூட்டணியில் இருப்பார். 2036-ல் தனியாக நிற்பார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement