3 தலித் பெரியவர்களை காலில் விழ வைத்த கொடுமை – அதுவும் இத செஞ்சதுக்காக இப்படி பண்ணி இருக்காங்க. என்ன ஒரு கொடுமை.

0
11020
ranjith
- Advertisement -

சமுதாயத்தில் இருக்கும் ஜாதிகளை ஒழிக்க பலரும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர் ஆனாலும் ஜாதிக் கொடுமைகள் ஜாதி கௌரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கருப்பர் கூட்டம் விவகாரம், பெரியார் சிலை மீது காவி சாயம் போன்ற பல்வேறு சர்ச்சைகளும் நாம் கடந்து தான் வந்திருக்கிறோம். அதே தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும் நாம் அடிக்கடி பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

-விளம்பரம்-

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தில் ஊர் பஞ்சாயத்து முன் தலித் பெறுவர்களை காலில் விழ வைத்துள்ள சமத்துவம் தமிழ் நாட்டில் இன்னமும் ஜாதி வெறி இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் என்ற கிராமம் .கடந்த 12ஆம் தேதி இந்த கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் தலித் இனத்தை சேர்ந்தவர்கள் திருவிழா நடத்தி இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழ காமெடியில் நடித்த நடிகர் திடீர் மரணம். காரணம் இது தானாம்.

- Advertisement -

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வேறு சில சாதியினர் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு முறைகளை மீறி கோவில் திருவிழா நடைபெறுவதாக போலீசுக்கு புகார் தெரிவித்து இருக்கிறார்கள். பின்னர் அங்கு வந்த போலீசார் திருவிழாவை நிறுத்தி இருக்கிறார்கள். பின்னர் அன்று மாலை அப்பகுதி இளைஞர்கள் சிலர் வேனில் இருந்தபடி இசை குழுவினரை வைத்து நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்கள். இதுகுறித்து மீண்டும் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட அந்த இடத்திற்கு வந்த போலீசார் இசை கருவிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் காலனி தரப்பினர் போலீசாரிடம் பேசி அந்த இசைக்கருவிகளை திரும்பப் பெற்றுள்ளனர். மறுநாள் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் போலீசாருக்கு புகார் அளித்த வேறு சாதி நபரை சேர்ந்தவரிடம் திருவிழாவிற்கு செய்த செலவு எல்லாம் வீணாகிவிட்டது ஏன் இப்படி போலீசாரிடம் புகார்அளித்தீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார்கள். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தவர் கிராம பஞ்சாயத்திடம் இந்த பிரச்சனை குறித்து கூறியுள்ளார். பின்னர் கிராமத்தினர் சேர்ந்து பஞ்சாயத்தை கூட்டி உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த பஞ்சாயத்தின் போது தாங்கள் செய்தது தவறுதான் என்று காலனி பகுதியை சேர்ந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த மற்ற சாதியினர் வாயால் சொன்னால் போதாது என்று காலனி பகுதியில் இருந்த தலித் இனத்தை சேர்ந்த மூன்று பெரியவர்களை அசுரன் படத்தில் வருவது போல பஞ்சாயத்தின் காலில் விழவைத்து இருக்கிறார்கள் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவியது. மேலும், 2 பெரியவர்களை காலில் விழ வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினரும் போலீசில் புகார் அளித்து உள்ளார்கள். மேலும், இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ள போலீசார் ஒரு தரப்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குனர் ரஞ்சித் உலகமே கொரோனா தொற்றுக்கு அழிந்து கொண்டிருக்கிறது, ஆனால் இந்த சாதிவெறியர்களின் வன்மம் மட்டும் அடங்குவதாய் இல்லை!! தமிழக அரசு அடக்க முயற்சிக்குமா??என்று படு ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார்.

Advertisement