கடவுளே ஏன் என் கண்ணை எடுத்துவிட்டாய்? 14 வயது செல்வராகவனுக்கு 45 வயதில் அவரே எழுதியுள்ள கடிதம்.

0
8167
- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் இயக்குனர் செல்வராகவனும் ஒருவர். இயக்குனர் செல்வராகவன் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும், தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷின் அண்ணன் என்பது தெரியும். இவர் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்,என்.ஜி.கே. என பல படங்களை இயக்கி உள்ளார். அதிலும் இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என்று ரசிங்கர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Every Selvaraghavan film, ranked from nine to one

இயக்குனர் செல்வராகவனுக்கு ஒரு கண்ணில் ஊனம் என்பதால் அவர் சிறு வயதில் எதிர்கொண்ட கேலி கிண்டல்கள் குறித்து தனது 14 வயது புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான ஒரு பதிவை செய்துள்ளார். அதில், அன்புள்ள செல்வா(வயது 14) இந்த உலகம் நீ ஊனமுற்றோர் என்பதாலும் உனக்கு ஒரு கண் இல்லை என்பதாலும் உன்னை பார்த்து சிரிக்கிறது நீ எங்கு சென்றாலும் மக்கள் உன்னை வித்தியாசமாக பார்க்கிறார்கள் அல்லது கிண்டல் செய்கிறார்கள் தினமும் இரவு அதை நினைத்து நீ இரவில் அழுதிருக்கிறார் சில சமயம் என்னுடைய கண்ணை ஏன் பறித்துக் கொண்டாய் ஆண்டவா என்று கடவுளை கேட்டிருக்கிறாய்.

- Advertisement -

ஆனால், நீ கவலை படாதே செல்வா. இன்னும் 10 வருடங்களில் நீயாக ஒரு கதையை எழுதி அதை இயக்கி யாரும் மறக்காத ஒரு பிளாக்பஸ்டர் கொடுப்பாய். அது உன் வாழ்க்கையை மாற்றும், அப்போதும் இந்த உலகம் உன்னை பார்க்கும், உன்னை கிண்டல் செய்ய அல்ல உன்னுடைய முயற்சியை கண்டு மதிப்பதற்குகாக. இன்னும் 10 வருடங்களில் நீ உருவாக்கும் ஒரு படம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இடம்பெறும் மக்கள் உன்னை ‘மேதாவி’ என்று அழைப்பார்கள்.

இப்போது உங்களைப் பார்க்கும்போது, ​​உங்கள் இளம் வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு உங்களைத் தொந்தரவு செய்த அந்தக் கண்ணை அவர்கள் காணவில்லை. தங்கள் திரைப்படங்களுடன் தங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு மனிதரை அவர்கள் பார்க்கிறார்கள். எனவே தைரியமாக இருக்க. கடவுள் உங்களிடமிருந்து விலைமதிப்பற்ற ஒன்றை எடுத்துக் கொண்டால், அதை விட அவர் உங்களிடம் ஏராளமாகக் கொடுப்பார். எனவே உற்சாகமுடன் புகைப்படங்களுக்கு புன்னகையுங்கள் (உங்களில் ஒருவரையும் சிரிப்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை) ஏனென்றால் வரும் ஆண்டுகளில் உங்களை பல படங்கள் எடுக்கப்படும். என்றும் அன்புடன் செல்வராகவன் (வயது 45) என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் செல்வராகவன்.

-விளம்பரம்-
Advertisement