முதல்வன் படத்தில் வரும் புகார் பெட்டியில் இருக்கும் Symbolக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறே இருக்கா?

0
703
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அந்த வகையில் கடந்த 1999ஆம் ஆண்டு ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் மிகப்பெரிய அளவு வெற்றியடைந்து பெரும் புகழை படக்குழுவினருக்கு வாங்கி கொடுத்து,

-விளம்பரம்-

இப்படத்தில் பத்திரிகையாளராக இருக்கும் கதாநாயகன் அர்ஜுன் முதலமைச்சரை ஒரு முறை பேட்டி எடுக்கிறார். அந்த பேட்டி விவாதமாக மாற முதல்வர் அந்த கதாநாயகனுக்கு ஒரு நாள் மட்டும் தமிழ் நாட்டிற்கு முதல்வராக வாய்ப்பு கொடுக்கிறார். அப்படி கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அர்ஜுன் மக்களுக்கு எப்படி நல்லது செய்கிறார். அந்த ஒரு நாள் முதல்வர் என்ற விஷயம் அவருடைய வாழ்க்கையை எப்படி தலைகீழாக மாற்றுகிறது என்பதுதான் கதை.

- Advertisement -

புகார் பெட்டி :

இந்நிலையில் முதல்வன் படத்தில் கதாநாயகன் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக ஆனா பிறகு சில திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவார். அந்த திட்டத்தில் ஓன்று தான் மக்களின் குறைகளை கூறும் புகார் பெட்டி. இந்த புகார் பெட்டியில் ஒரு பசு மாடு மணியை இழுக்கும் படியாக ஒரு புகைபடம் இருக்கும். ஆனால் குறைந்த நேரம் மட்டுமே வரும் இந்த புகைப்படத்தில் இயக்குனர் ஷங்கர் பெரிய விஷியத்தை மறைத்து வைத்திருக்கிறார்.

மனுநீதிச் சோழன் :

அதாவது கி.மு 235ல் தமிழ் நாட்டை ஆண்ட புகழ்பெற்ற சோழ மன்னரான மனுநீதிச் சோழன் நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். ஏனெற்றால் அவரது அரண்மனை வாசலில் ஒரு பெரிய மணியை கட்டி வைத்திருப்பாராம். நாட்டில் உள்ள மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்று அந்த மணியை அடித்தால் அரசரின் அறைக்கே அந்த மணியோசை கேட்குமாம். அப்படி ஒரு நாள் மணியோசை கேட்டபோது வந்த வெளியில் வந்து பார்த்த மன்னருக்கு பெரிய ஆச்சரியமாக இருந்துள்ளது.

-விளம்பரம்-

அதாவது ஒரு பசுமாடு அந்த மணியின் கயிற்றை இழுத்து மணி அடித்தாம். விசாரித்ததில் மன்னனின் மகன் உலா வரும் போது அந்த பசுவின் இளம் கன்றை தேரின் சக்கரத்தில் ஏற்றி கொன்று விட்டாராம். இதனை அறிந்த மனுநீதிச் சோழன் தான் பெற்ற கன்றை இழந்த பசுவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். எனவே தன்னுடைய மகனை கொள்ள அமைச்சரிடம் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் இளவரசரை கொள்ள மனம் வராத அமைச்சர் வாழை எடுத்து தன்னை தானே மாய்த்துக்கொண்டார்.

பின்னர் யாருமே முன்வராத காரணத்தினால் மனுநீதிச் சோழனே தேரை எடுத்து சென்று தன்னுடைய மகன் மீது ஏற்றி கொன்று விட்டாராம். இந்த தகவல் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. இப்படி மனுநீட்ச் சோழன் கதையில் வருவது போல எப்படி நியாயமான தீர்ப்பு கிடைக்கிறதோ அப்படித்தான் அந்த புகார் பெட்டியில் வரும் புகார்களுக்கு கண்டிப்பாக நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று சூசகமாக “முதல்வன்” படத்தில் சொல்லியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

Advertisement