அந்த வீடியோவ சங்கர் சார் கிட்ட காட்டினோம், அவர் பாத்துட்டு இப்படி சொல்லிட்டாரு – திரிஷாவை நிராகரித்துள்ள ஷங்கர்.

0
1193
trisha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் ரஜினி, கமல் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

என்னதான் டாப் நடிகர்களின் படத்தில் நடித்தாலும் நடிகை திரிஷாவிற்கு இதுவரை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் வாய்ப்பை திரிஷா தவறவிட்டுள்ளது பலரும் அறிந்திராத ஒரு விஷயம். இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்ட செலவில் பெரிய நடிகர்களை வைத்து மட்டும் தான் ஹிட் கொடுப்பார் என்ற விமர்சனங்கள் இருந்த நிலையில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுத்த படம்தான் பாய்ஸ்.

இதையும் பாருங்க : உடல் தெரியும் அளவு மெல்லிய உடையில் படு கிளாமர் அவதாரத்தில் ரஷி கன்னா நடத்திய போட்டோ ஷூட்.

- Advertisement -

சித்தார்த், நகுல், பரத், மணிகண்டன், தமன், ஜெனிலியா என்று பலரும் அறிமுகமான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ஜெனிலியாவிற்கு முன்பாக நடிகை திரிஷா தான் ஹரிணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம் என்று ஷங்கரின் துணை இயக்குனராக பணியாற்றிய முத்துவடுக என்பவர் கூறியுள்ளதாவது. இந்த படத்தில் நடிகையை தேர்வு செய்வதற்காக பல்வேறு இடங்களில் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்.

வீடியோவில் 2 : 05 நிமிடத்தில் பார்க்கவும்

அந்த சமயத்தில் கிண்டியில் நடைபெற்ற மிஸ் மெட்ராஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சியில் முன்னாள் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றவரும் வந்திருந்தார். அவரை பார்த்ததும் எங்களுக்கு பிடித்து போய் அவரை கேமராவில் படம் பிடித்து, சங்கர் சார் அவரை கண்டிப்பாக கதாநாயகியாக தேர்வு செய்வார்கள் என்று நம்பி அவரிடம் போய் காட்டினோம். அந்த வீடியோவை அவர் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லவில்லை. இந்த பெண்ணிடம் ஏதோ மிஸ் ஆகிறது. அதனால் வேறு ஒரு நடிகையை தேடுங்கள் என்று சொல்லிவிட்டார். நாங்கள் வீடியோவில் காட்டியது வேறு யாரும் இல்லை அது திரிஷா தான் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Advertisement