அப்பா, கடைசியா சொன்ன அந்த வார்த்தையை மறக்கவே மாட்டேன். சிறுத்தை சிவா உருக்கமான பேட்டி.

0
1253
siruthai
- Advertisement -

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை சமீபத்தில் காலமாகி உள்ள சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சிறுத்தை சிவா. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சிறுத்தை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து இவர் வீரம், விவேகம், விசுவாசம் போன்று பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

-விளம்பரம்-
அஜித்

இப்படி ஒரு நிலையில் சிறுத்தை சிவா அவர்களின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமாகி இருக்கிறார். இதனால் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் வசித்து வந்த இவரது தந்தை ஜெயக்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயக்குமார் ஆவணப்பட புகைப்பட கலைஞராக இருந்தவர். அவரது தந்தை ஏ.கே.வேலன் திரைத்துறையில் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து மறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிறுத்தை சிவாவின் இறுதி சடங்கில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிறுத்தை சிவா பேசுகையில் ‘அப்பாவை நினைச்சு எப்போவும் பெருமைப்படுறேன். அப்பாவுக்கு கமர்ஷியல் படங்கள் இயக்கணும்னு ஆசையிருந்தது.ஆனால் ஒரு படத்தை இயக்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை இருப்பினும் சினிமாவில் ஒரு இயக்குனராக என்னுடைய வளர்ச்சியை பார்த்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் என்னுடைய முதல் படமான படத்தின் வெளியீட்டின்போது என் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து சென்றேன் என்னப்பா மிகவும் பெருமைப் பட்டார்.

''அப்பா சொன்ன கடைசி வார்த்தை... ரஜினி, அஜித்தின் போன் அழைப்பு!'' - சிறுத்தை சிவா

எல்லா அப்பாக்களுக்கும் தன்னுடைய மகன் ஜெயிக்குறதைப் பார்க்குறது ரொம்ப பிடிக்கும். . ‘வீரம்’ படம் முடிச்சிட்டு அப்பாவுக்கு போட்டு காட்டினேன். படம் பார்த்து முடிச்சிட்டு தோள்ல தட்டி கொடுத்தார்.  ‘வீரம்’ ப்ளாக் பஸ்டர் ஹிட்டானப்போ ரொம்ப சந்தோஷப்பட்டார். ரொம்ப நாளா உடம்பு சரியில்லாம இருந்தாங்க. எங்களால் முடிஞ்சளவுக்கு முயற்சி பண்ணோம். ஆனா, அப்பாவை காப்பத்த முடியாம போயிருச்சு.அப்பா, கடைசியா ‘நல்லாயிருனு’ சொன்னார். இந்த வார்த்தையை வாழ்க்கையில மறக்க முடியாது. பெரிய ஆசிர்வாதமா இதை நினைக்குறேன்” என்று வருத்ததுடன் கூறியுள்ளார் சிவா.

-விளம்பரம்-
Advertisement