தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா, நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களை கொடுத்து உள்ளார். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளி வந்த படங்கள் “கென்னடி கிளப்” மற்றும் “சாம்பியன்”. இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
சுசீந்திரன் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் சரி, யாரையாவது பாராட்ட வேண்டுமானாலும் சரி தன் கைப்பட ஒரு பேப்பரில் எழுதி வாழ்த்து தெரிவிப்பார். மேலும், தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகனாக திகழ்ந்து வரும் நடிகர் சூரியை திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது இயக்குனர் சுசீந்திரன். தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் இன்று காலை வழக்கம் போல் வாக்கிங்(நடை பயற்சி) சென்று கொண்டு இருந்தார்.
இதையும் பாருங்க : ஒரு வருடம் வேலை இல்லாமல் இருந்த கணவர். வேலை செய்து காப்பாற்றிய நிஷாவின் சோகமான பக்கம்.
அப்போது திடீரென்று ஒரு வாகனம் இவரை மோதி விட்டு சென்று உள்ளது. இதனால் இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார். இவருக்கு அதிக அளவில் காயம் ஏற்பட்டு உள்ளது. பின் இவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சையும் நடந்தது. சிகிச்சைக்கு பின் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் சில வாரங்களுக்கு இயக்குனர் சுசீந்திரன் ஓய்வில் தான் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். இயக்குனர் சுசீந்திரன் கூடிய விரைவில் குணமடைய வேண்டும் கோலிவுட் வட்டாரத்தில் கூறி வருகிறார்கள். மருத்துவமனையில் ஓய்வு எடுக்கும் சுசீந்திரன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.மேலும், சுசீந்திரன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.