பிரபல இயக்குனர் சுசி கணேசன் குடும்பத்தில் நேர்ந்த இழப்பு – யார் தெரியுமா? முன்னாள் ஆட்ச்சியராம்.

0
405
- Advertisement -

பிரபல இயக்குனர் சுசி கணேசனின் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் சோக சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் சுசி கணேசன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

-விளம்பரம்-

முதல் படமே இவருக்கு ரசிகர் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக இவர் பல விருதுகளையும் வாங்கி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் விரும்புகிறேன், திருட்டுப் பயலே, திருட்டுப் பயலே 2, கந்தசாமி போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், இவர் தமிழில் இயக்கிய திருட்டுப் பயலே படத்தை இந்தியில் ரீமேக் செய்திருந்தார்.

- Advertisement -

சுசி கணேசன் குறித்த தகவல்;

இந்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதற்குப்பின் திருட்டுப் பயலே 2 படத்தையும் ரீமேக் செய்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. விரைவில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் சுசி கணேசன் மீது மீடு புகார் சின்மயி அளித்திருந்தார்.

சுசி கணேசன் குறித்த செய்தி:

அதுமட்டுமில்லாமல் சில வருடங்களுக்கு முன்பு லீனா மணிமேகலை பாலியல் ரீதியாக சுசி கணேசன் தொந்தரவு செய்வதாக போலீசிலும் புகார் அளித்திருந்தார். இப்படி இவர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்தாலும் இவர் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பெயரில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சுசி கணேசன் வீட்டில் ஏற்பட்டு இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சண்முகவேலு மரணம்:

அதாவது, சுசி கணேசனின் மனைவி மஞ்சரி. இவருடைய தந்தை சண்முகவேலு தான் இறந்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே இவருக்கு வயது மூப்பு காரணமாக பிரச்சனையில் அவஸ்தை பட்டு இருந்தார். இவருக்கு இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி சண்முகவேலு இறந்திருக்கிறார். தற்போது இவருக்கு 85 வயது ஆகிறது.

சண்முகவேலு குறித்த தகவல்:

இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் டெப்டி கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அது மட்டும் இல்லாமல் இலங்கை அகதிகள் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் அந்த பகுதியில் தாசில்தாரகவும் பணியாற்றி இருந்தார். மேலும், இவருடைய இறுதி சடங்குகள் அவருடைய சொந்த ஊரான காரைக்குடியில் நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement