மாதவிடாய் வலியில் இருந்து தப்பிக்க பேச்சுலர் நாயகி திவ்யபாரதி சிபாரிசு செய்திருக்கும் கருவி குறித்த தகவல் தற்போது இதயத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் கிரஸ்ஸாக திகழ்பவர் திவ்ய பாரதி. இவர் பிரபல மாடல் ஆவார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு திவ்யா பாரதி நடிப்பில் வெளிவந்த படம் ‘பேச்சுலர் ‘. இந்த படத்தை இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார்.
மேலும், இந்த படத்தில் ஜி வி பிரகாஷ், முனிஸ்காந்த், பகவதி பெருமாள் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மற்றும் ஜான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் திவ்ய பாரதி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் முதல் படத்தின் மூலம் இன்றைய இளைஞர்களின் கிரஸாக திவ்ய பாரதி கவர்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம்.
திவ்யபாரதி திரைப்பயணம்:
மேலும், இந்த படத்தை தொடர்ந்து திவ்யபாரதி அவர்கள் மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக முகென் நடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் முகென். மேலும், திவ்ய பாரதி நடிக்கும் மதில் மேல் காதல் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், நிழல்கள் ரவி, அனுஹாசன், சுப்பு பஞ்சு என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
திவ்ய பாரதி நடிக்கும் மதில் மேல் காதல்:
இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி இவர் படங்களில் நடித்து கொண்டு இருந்தாலும் இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதில் தான் அடிக்கடி நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்கள்,வீடியோக்கள், ரசிகர்களுடன் உடன் உரையாடல் என எல்லாம் பகிர்ந்து இருக்கிறார்.
திவ்ய பாரதி பதிவு:
அதிலும் இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வேற லெவலில் ட்ரெண்ட். இந்த நிலையில் மாதவிடாய் போது பயன்படுத்தும் இயந்திரம் குறித்து திவ்யபாரதி பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மாதவிடாய் சுழற்சியின் போது பல பெண்கள் வலியால் துடிப்பது அனைவரும் அறிந்ததே. இதை கட்டுப்படுத்தும் விதமாக எலக்ட்ரிக் ஹீட்டிங் பேட் என்ற ஒரு இயந்திரம் இருக்கிறது.
மாதவிடாய் வலியை கட்டுப்படுத்தும் இயந்திரம்:
இதை திவ்யபாரதி தன்னுடைய இடுப்பில் அணிந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இதை நான் அமேசானில் வாங்கினேன். இது மாதவிடாய் வரும்போது வலியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதை எனக்கு நல்ல ரிசல்ட் கொடுத்திருக்கிறது. நீங்களும் இதை பயன்படுத்துங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார். தற்போது இவருடைய பதிவு தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.