எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் இயக்கிய படங்கள் என்ன தெரியுமா? வெளியான படங்களின் லிஸ்ட்

0
1474
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து இயக்கிய படங்கள் குறித்த லிஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை. இந்த சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

மதுரையில் ஒரு வீட்டில் அண்ணன் தம்பிகள் மூவரும் வீட்டுப் பெண்களை அடிமையாகவும், வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாகவும் நடத்தி கொண்டு வருகிறார்கள். இவர்களை அந்த பெண்கள் எதிர் கொண்டு எப்படி தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதை. தற்போது இந்த சீரியல் பரபரப்பாக்க பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் டிஆர்பியின் உச்சத்தில் இந்த சீரியல் தான் இருக்கின்றது.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும், இந்த சீரியலில் மூத்த அண்ணன் ஆக ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மாரிமுத்து. இவர் இந்த சீரியலில் ஆணவம், அகங்காரம், திமிரு, பெண்கள் என்றாலே அடிமைகள் என்ற எண்ணத்தில் இருப்பவர். இவர் இந்த சீரியலில் வில்லனாக நடிக்கிறார். பொதுவாகவே வில்லன் என்றாலே மக்கள் மத்தியில் வெறுப்பு தான் வரும். ஆனால், இவருக்கு என்று தனி ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

மாரிமுத்து திரைப்பயணம்:

இந்த சீரியலில் இவருடைய பஞ்சுகள், வசனங்கள் எல்லாமே பார்வையாளர் மத்தியில் ஈர்ப்பை பெற்று இருக்கிறது. இவர் எதிர்நீச்சல் சீரியலுக்கு முன்பு பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதன் பின் இவர் படங்களில் நடிக்க தொடங்கினர். பின் இவருடைய நடிப்பு தீனிக்கு விருந்தாக அமைந்தது தான் எதிர்நீச்சல் சீரியல்.

-விளம்பரம்-

மாரிமுத்து நடிக்கும் படங்கள்:

தற்போது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை அடுத்து கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து இருக்கிறார். இந்த நிலையில் இவர் சினிமாவில் இயக்குனராக இருந்தபோது இவர் இயக்கிய படங்கள் குறித்த விபரங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மாரிமுத்து இயக்கிய படங்கள்:

அதாவது, மாரிமுத்து அவர்கள் சினிமா உலகில் நுழைந்த ஆரம்ப காலத்தில் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா போன்ற பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து இருக்கிறார். அதன் பின் இவர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கினார். ஆனால், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதனால் தான் இவர் நடிப்பு பக்கம் திரும்பி விட்டார். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் இவர் வில்லனாக மிரட்டி கொண்டு வருகிறார். இனி இவருக்கு சினிமாவில் ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement