5 வயது மகள் இருப்பது தெரிந்தும் இஸ்லாம் மதம் மாற்றி திருமணம் செய்துவிட்டு கற்பமானதும் கழட்டிவிட்ட சீரியல் நடிகர். இவரா இப்படி ?

0
691
divya
- Advertisement -

சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான தொடர் தான் செவ்வந்தி. 90 களில் தொடர்களிலும், படங்களிலும் கலக்கிய நடிகர் ராகவ் தான் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் சினிமா துறையில் நடிகர் மட்டுமல்லாமல் மியூசிக் கம்போஸ்ஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர். நடிகர் ராகவ் ஒரு சிறந்த டான்ஸர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவரை அடுத்து சீரியலில் நாயகியாக நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிக்கிறார். இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். பல்லக்கு என்னும் கன்னட படத்தின் மூலம் தான் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி இருந்தார். இருந்தாலும், இவருக்கு கன்னட சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பெரும் புகழை சேர்த்தது.

-விளம்பரம்-

நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிக்கும் சீரியல்:

பின் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் தான் இவர் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து மகராசி என்ற தொடரில் திவ்யா நடித்தார். தற்போது இவர் செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது. அதோடு சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் திவ்யாவிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது.

- Advertisement -

நடிகை திவ்யா ஸ்ரீதர் திருமணம்:

இவர் திருமணம் செய்து கொண்ட நபரும் சீரியல் நடிகர் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா தொடரின் நாயகன் சித்து என்கிற ஆர்னவ் தான். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். திவ்யாவும், நடிகர் ஆர்ணவும் நீண்ட நாள் காதலர்கள். மேலும், இவர்களுடைய திருமணத்தை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ரெஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்திருக்கிறார்கள்.

கர்ப்பமான திவ்யா :

ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். அவருடைய மகள் பெயர் ஜெய்சனா. ஏற்கனவே திவ்யா தன் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு எனது இளவரசி என்று கூறி இருந்தார். ஆனால், இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? யார் என்று விவரம் எதுவும் தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

கற்பமானதும் கைவிட்ட அர்னவ் :

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். திவ்யாவை விரட்டி விரட்டி காதலித்து இருக்கிறார் அர்னவ். இஸ்லாம் மதத்தை சேர்ந்த அர்னவ், திவ்யாவை மதம் மாறினால் தான் திருமணம் செய்துகொள்வதாக கூறி இருக்கிறார். இதனால் திவ்யாவும் மதம் மாறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்று ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் அருணாவிற்கு வேறு ஒரு சின்னத்திரை நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டதால்அர்னவ் மீது நம்பிக்கை இழந்த திவ்யா தன்னை ஊரறிய திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு இருக்கிறார்.

போலீசில் புகார் :

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திவ்யாவை ஊரறிய திருமணம் செய்திருந்தார் அர்னவ், திருமணம் முடிந்து சில வாரங்களில் திவ்யா கர்ப்பமாகி இருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு வளைகாப்பு கூட நடைபெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் அர்னவ், திவ்யாவை பிரிந்து சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திவ்யாவிற்கு உடல்நலவு குறைவு ஏற்பட்டிருக்கிறது. கர்ப்பிணியான அவர் கவனித்துக் கொள்ள கூட ஆளில்லாமல் அனாதையாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது அவரை கருக்கலைப்பு செய்ய சில மருத்துவர்கள் வற்புறுத்தியதாக திவ்யா கூறியிருக்கிறார். மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் கூறி புகார் கொடுத்து இருக்கிறார் திவ்யா

Advertisement