படையப்பா படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா, என்ன கார் தெரியுமா ?

0
4631
- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வந்த மாஸ் படங்களில் ஒன்று தான் படையப்பா. இந்த படம் 1999ஆம் ஆண்டு வெளிவந்தது. சூப்பர் ஸ்டாரருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மணிவண்ணன் என பலர் நடித்திருப்பர்கள்.
ஆனால், படத்தில் மாஸ் என்றால் ஒன்று சூப்பர் ஸ்டார் மற்றோன்று நீலாம்பரி என்ற ரம்யா கிருஷ்ணன். படத்தில் ரஜினிக்கு இணையாக மாஸ் காட்டுவார் நீலாம்பரி.

இந்த படத்தில் ரஜினியை முதன் முதலாக பார்க்க வரும் போது ஒரு காரில் வருவார் ரம்யா கிருஷ்ணன். இந்த கார் Toyota மாடல் கார் ஆகும். இந்த காரின் சிறப்பம்சம் என்னவென்றால் அதன் டோர் மேலாக திறக்கும்.

- Advertisement -

இதற்கு Seissor Door அல்லது Lambo Door என அழைக்கப்படும். இந்த கார், அந்த படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமாரின் கார் ஆகும். இதனை அப்போது 6 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்.
இதனை ரொம்ப நாளாக தனது சென்டிமென்ட் காராக வைத்திருந்தார் அவர். சூப்பர் ஸ்டார் ரஜினி, கே.எஸ் ரவிக்குமாரை பார்க்கும் போதெல்லாம் கேப்பது உங்கள் கார் எங்கே? என்பது தான். தற்போது அந்த காரை விற்றுவிட்டு Honda Accord காரை வங்கிவிட்டார் கே.எஸ்.