இதை செய்தால் தான் அவர் ஆத்மா சாந்தி அடையும் – முதலைச்சருக்கு டாக்டர் சைமன் மனைவி கண்ணீருடன் வேண்டுகோள்.

0
1702
simon
- Advertisement -

கடந்த இரண்டு மதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு உலக நாடுகளை பாதித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,601 ஆகவும், 590 பேர் பலியாகியும் உள்ளார்கள். நாளுக்கு நாள் ஒட்டுமொத்த உலகமும் கொரோவினால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார்.

-விளம்பரம்-
 டாக்டர் சைமனின் மனைவி
டாக்டர் சைமனின் மனைவி மற்றும் குடும்பம்

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவராக இருந்து வந்த நபர் கடந்த சில தினங்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பெற்று வந்த அந்த மருத்துவர் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன. கொரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்தார்.

இதையும் பாருங்க : ‘ஷூட்டிங்கிற்கு குளிக்காமல் வந்துவிட்டேன் அதன் இப்போ குளிக்கிறேன்’ – பம்பு செட்டில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ஜாக்லின்

- Advertisement -

அவருடைய உடலை அடக்கம் பண்ணுவதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது அவர் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே அந்த இடத்திற்கு 250 பேருக்கு மேல் வந்து அடக்கம் பண்ண கூடாது என்று போராட்டம் செய்தார்கள். இதை அடுத்து அவரது உடல் வேலங்காடு சுடுகாட்டில் புதைத்துவிட்டார். ஆனால், அங்கேயும் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் தான் அவரது உடல் புதைக்கப்பட்டது.

மக்களின் நலனுக்காக போராடி வரும் மருத்துவர்களின் உடலை தகனம் செய்யவிடாமல் போராடிய மக்களால் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.இந்த நிலையில் சைமனின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இறப்பதற்கு முன்பாக தனது கணவர் வீடியோ காலில் பேசியதாக கூறியுள்ள அவர், தனது கணவரின் கடைசி ஆசை குறித்தும் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : ஹீரோவாவதற்கு முன்பாகவே சூர்யா படத்தில் தோன்றியுள்ள கார்த்தி. வைரலாகும் புகைப்படம்.

-விளம்பரம்-

அதில் அவர் பேசியுள்ளதாவது, என்னுடைய கணவர் அடக்கம் செய்யப்பட்டதை நானோ, என் மகனோ எங்கள் கண்களால் பார்க்கவில்லை என்பதை எங்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இறப்பதற்கு முன்பாக என் கணவர் வீடியோ காலில் பேசிய போது, ஒரு வேலை நான் இறந்தால் என்னுடைய உடலை நம் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், வேலங்காடு மயானம் ஒரு சுடுகாடு. அங்கு எந்த கல்லறையும் கிடையாது. அங்கு புதைப்பதற்கு பதிலாக உடலை எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்தால் தான் அவர் ஆன்மா சாந்தியடையும் என்றும் இதற்கு முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement