‘அவர்களை விமர்சித்தால் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவீர்கள்’ – விஜய்யின் திடீர் அறிக்கையின் பின்னணி.

0
247
Vijay
- Advertisement -

அரசியல் பதவிகளில் உள்ளோர்களை விமர்சிக்க வேண்டாம் என விஜய் சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பொதுவாக விஜய் படங்கள் என்றாலே அதில் அரசியல் வசனங்கள் இடம்பெறுவது வாடிக்கையான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பீஸ்ட் படத்தில் கூட இந்த அரசியல் விளையாட்டெல்லாம் என்கிட்ட வேண்டாம், நான் அரசியல்வாதி கிடையாது என்று பேசிய வசனம் இடம்பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதே போல அந்த ட்ரைலரில் விஜய்யின் இன்ட்ரோவில் கத்தியை வைத்து காவி நிற துணியை கிழிப்பது போல காண்பிக்கப்பட்டது. இதனால் நடிகர் விஜய் காவிகளை கிழிக்க வந்துவிட்டார் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் சிலர் பதிவிட துவங்கியதும், திடீரென பிரதமர் மோடி இருக்கும் காவித்துணியை விஜய் கிழிப்பது போன்ற புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலானது.

இதையும் பாருங்க : குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் பட நடிகையா இது. திருமணத்திற்கு பின் எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

பீஸ்ட் ட்ரைலரில் காவி சர்ச்சை :

இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பா.ஜ.க ஆதரவாளர்கள், விஜய் ரசிகர்கள் இவ்வாறு செய்வது அரசியல் நாகரீகமல்ல. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்படும் என அறிவித்தனர். சினிமா தயாரிப்பாளரும், பாஜகவைச் சேர்ந்தவருமான ஜே.எஸ்.கே கோபி, டிவிட்டரில் இது குறித்து கண்டனத்தை பதிவு செய்தார். விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யின் சார்பாக அறிக்கை

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது.

-விளம்பரம்-

இயக்கத்தை விட்டு நீக்கம் :

இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் ஏற்கனவே அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறு செயல்பட்டவர்களை இயக்கத்தை விட்டு நீக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இந்த படம் முஸ்லீம்களை தீவிரவாதி போல காண்பிக்கப்பட்டு இருபதால், இந்த படத்தில் வெளியிட குவைத் நாட்டின் தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. அதே போபட இந்த படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதாக சொல்லி, தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி படத்தை தமிழ்நாட்டில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

முஸ்லீம் லீக் எதிர்ப்பு :

தற்போது ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். இது போன்ற சமயத்தில் அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் ‘பீஸ்ட்’ படத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த திரைப்படம் இப்போது வெளிவந்தால் பிரச்னை ஏற்படும்.அதனால், அந்த திரைப்படத்தை வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்,” என அந்த கட்சியின் தலைவர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Advertisement