பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் குடும்பத்திலும் கொரோனா – அதுவும் யாருக்கு பாருங்க பாவம்.

0
2435
kumaran
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-
kumaran

அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர் .சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : சிம்புவுடன் வாயில் சிகெரெட்டுன் அசின் – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.

- Advertisement -

சினிமாவை போல சின்னத்திரை நடிகர்கள் குடும்பத்திலும் கொரோனாவின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. பல்வேரு சின்னத்திரை நடிகர் நடிகைகள் கொரோனா தொற்றுக்க்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஐய் டிவியில் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரில்லா, ஆஜீத், சென்ராயன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனின் குடும்பத்தினரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். சமீபத்தில் குமரனின் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர், தனது தந்தையுடன் இருந்து அவரை பார்த்துக்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement