தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள் – ஜோதிகாவின் கருத்திற்கு மோகன் பதிலடி.

0
47939
jothika

இருபது வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோயினியாக கலக்கியவர் நடிகை ஜோதிகா. சினிமா துறைக்குள் ஹிந்தி படத்தின் மூலம் தான் ஜோதிகா என்ட்ரி கொடுத்தார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் , சூர்யா என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கொடி கட்டி பறந்தார். இவர் தமிழில் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். அதன் பின் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பின்னர் தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற JFW விருது விழா ஒன்றில் ஜோதிகா அவர்கள் கலந்து கொண்டார். அதில் அவர் புடவை அணிந்து வந்திருந்தார். அந்த விழாவில் ஜோதிகா அவர்கள் தமிழர்களுக்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் சில வார்த்தைகளை பேசி உள்ளார். அதில் ஜோதிகா அவர்கள் கூறியிருப்பது, தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள்.

இதையும் பாருங்க : கண்ட இடத்தில் வளையத்தை குத்திய ரைசா – கண்ட மேனிக்கு கலாய்க்கும் மீம் கிரியேட்டர்கள். ரைசாவின் ரியாக்ஷன்.

- Advertisement -

அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று பேசியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் நடிகை ஜோதிகாவை தாறுமாறாக வறுத்து எடுத்து வருகிறார்கள். அதிலும் சிலர் தமிழர்களின் பெருமையை உணர்த்தும் வகையில் உள்ள தஞ்சை பெரியகோயில் ஆரம்ப காலத்தில் குழந்தைகள் கல்வி பயிலும் பாடசாலையாகவும், உணவு சேர்த்து வைக்கும் தானியக்கிடங்காகவும், மன்னர்கள் கூடும் சட்ட சபையாக இருந்தது.

இப்படி தமிழனின் உணர்வில் கலந்து இருக்கும் தஞ்சை பெரிய கோயிலை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது. லட்சகணக்கில் செலவு செய்து மேக்-கப் போடும் உங்களுக்கு தஞ்சைபெரிய கோயிலை பற்றி பேசுவதா? என்று ஜோதிகாவை நெட்டிசன்கள் சரமாரியாக திட்டி வருகின்றனர். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் பாருங்க : விஜய்யின் பெருந்தன்மையை பாராட்டி நன்றி தெரிவித்த முதலமைச்சர். வைரலாகும் வீடியோ.

-விளம்பரம்-

இந்த நிலையில் ஜோதிகாவின் கருத்திற்கு ஏன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று ட்விட்டர் வாசி ஒருவர் திரௌபதி பட இயக்குனர் மோகனிடம் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த மோகன், அருள்மொழி வர்மன் ஒரு அதிசய பிறவி.. மாமன்னன்.. ராஜராஜ சோழன்.. அவர் தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள்.. யார் நினைத்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரின் புகழை, இவர் வழிபட்ட ஈசனை, இவர் உருவாக்கிய இந்த அதிசயத்தை அசைத்து கூட பார்க்க முடியாது.. இவரை தொட்டால் கெடுவார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement