எப்படி இருக்கிறது ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ட்ரைவர் ஜமுனா’ – முழு விமர்சனம் இதோ.

0
780
- Advertisement -

வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் 18 ரீல்ஸ் நிறுவனத்தின் எஸ்பி சௌத்ரி தயாரிப்பில் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணா பிக் பாஸ் மணிகண்டன், ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி போன்றவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கால் டாக்சி டிரைவராக நடிகை ஐஸ்வர்யா நடித்துள்ள இப்படம் எப்படி இருக்கின்றது? என்று பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கதைக்களம் :

தந்தையை இழந்த ஐஸ்வர்யா ராஜேஷ், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட தாய், ஓடிப்போன தம்பி என வாழ்க்கை இருந்து வருகிறது. தந்தையின் ஓட்டுநர் பணியை ஐஸ்வர்யா தொடர்ந்து செய்து வருகிறார். இந்த நிலையில் அரசியல் வாதியான ஆடுகளம் நரேனை கொள்ள கூலிப்படை வருகிறது அவர்களை துரத்தி போலீஸும் வருகிறது. பின்னர் அந்த கூலிப்படை ஐஷ்வர்யா ராஜேஷின் டாக்சியில் ஏறிக் கொள்கின்றனர் இவர்களை போலீஸ் துரத்துகிறது. இப்படிபட்ட நிலையில் போலீசிடம் இருந்து இவர்கள் தப்பித்தனரா? அவருடைய தந்தை எப்படி கொலை செய்யப்பட்டார்? அதற்கான காரணம் என்பது மீதி கதையாக உள்ளது.

- Advertisement -

முதல் பாதியில் குடும்ப பிரச்னையையும், ஓட்டுநர் தொழிலின் மீது தான் வைத்துள்ள காதலையும் காட்டுவதாக கதை நகர்கிறது. இவரின் நடிப்பு எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான எண்னத்தை தருகிறது. ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி கதாபத்திரம் கவனத்தை பெறுகிறது. அதே போல பிக் பாஸ் மணிகண்டன், கவிதா பாரதி போன்றவர்கள் நடிப்பு பரவாயில்லை. அபிஷேக்கின் காமெடிகள் சலிப்படைய வைக்கின்றன. ஆனால் சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள் எதுவும் இல்லாமல் திரைக்கதை நேர் கோட்டில் செல்கிறது.

படம் இரண்டாம் பாதியில் படம் வேகமெடுத்தாலும் பல லாஜிக் குறைபாடுகள் படத்தில் காணப்படுகின்றது. தொடர் கொலை செய்வதாக சொல்லும் கூலிப்படை செய்யும் தவறுகள் காமெடி செய்வதாக இருக்கிறது. அவர்களை வாலாஜாபாத்தில் இருந்து பிடிக்க வரும் போலீசார் பல சொதப்பலான முடிவுகளை எடுக்கின்றனர். அது போல ஒரு முன்னாள் எம் எல் ஏவை கூலிப்படை கொலை செய்ய வரும்போது அவர் காவல்துறையை நாடாமல் குழப்பமாக இருக்கிறார். படம் அதிக இடங்களில் ரசிகர்களே சொல்லும் படியாகத்தான் இருந்தது.

-விளம்பரம்-

ஆனால் நெடுஞ்சாலையில் நடக்கும் துரத்தும் காட்சிகள், கருக்குள்ளே நடக்கும் சில காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் படியாக இருக்க ஒளிப்பதிவாளர் ஆர்.ராமன் உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் துரத்தும் காட்சிகளில் சுவாரசியத்தை சேர்ப்பதற்காக ஐஷ்வர்யாவை மட்டுமே மையமாக கேமெரா இருக்கிறது, இதனால் அங்கே என்ன நடிக்கிறது என்றே தெரியவில்லை. ஆனாலும் கடைசியில் வரும் பாடல் கேட்பதற்கு இனிமையான உணர்வை தருகிறது.

நிறை:

ஆர்.ராமன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

சுவாரசியமான திரைக்கதை.

நடிகை ஐஷ்வர்யா இயல்பாக நடித்திருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சிகள் மற்றும் BGM நன்றாக இருந்தது.

குறை :

அதிக இடங்களில் லாஜிக் மிஸ்டேக்.

வில்லன்களில் நடிப்பு ஓரளவுதான்.

காமெடி ஒத்துப்போகவில்லை.

தொடக்கத்தில் விறுவிறுப்பாக சென்றாலும் இடையே சில இடங்களில் தொய்வு.

மொத்தத்தில் சுவாரசியமான கதையா நோக்கி விறுவிறுப்பாக சென்ற “டிரைவர் ஜமுனா” வழியில் இருந்த வேகத்தடையில் பார்க்காமல் விட்டுவிட்டார்.

Advertisement