திரெளபதி தாயை கேவலமா பேசுன வாய் – கர்ணன் பாடல் சர்ச்சைக்கு இயக்குனர் மோகன் போட்ட பதிவு.

0
58640
mohan
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்திற்கு தடைகோரி வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் மதுரை கிளை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ஒன்றை தனுஷிற்கு அனுப்பியிருந்தது இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதே படத்தில் இடம் பெற்றுள்ள ‘பண்டாரத்தி புராணம்’ எனும் பாடல் தணிக்கை வாரியம் அனுமதியில்லாமல் வெளி யிடப்பட்டது. அந்தப் பாடலில் ‘பண்டாரத்தி மற்றும் சக்காளத்தி’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல் மிகவும் பின்தங்கிய பட்டியலில் உள்ள ஆண்டி பண்டாரம் சமூகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

-விளம்பரம்-

எனவே, ’கர்ணன்’ திரைப்படத்தில் இருந்து ’பண்டாரத்தி’ பாடலை நீக்கவும், அதுவரை ’கர்ணன்’ திரைப் படத்தை வெளியிடத் தடை விதித் தும் உத்தரவிட வேண்டும் என்று சிவகாசியைச் சேர்ந்த ஆர்.டி.கே. ராஜபிரபு என்பவர் , உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, க நடிகர் தனுஷ், பாடல் ஆசிரியர் யுகபாரதி, பாடலைப் பாடிய தேவா, இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, சினிமா தணிக்கை வாரிய மண்டல அலுவலர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இது தொடர்பாக அறிவிக்கை வெளியிட்டுள்ள படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ”பண்டாரத்தியின்ன் புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி அந்த வார்த்தையை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம் தேவதைகளை எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்து விடப் போகிறதா என்ன?

இனி எம ராஜாவின் விளக்காக மஞ்சனத்தி இருப்பாள் இனி எமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான் என்று கூறி இருந்தார். மாரி செல்வராஜ் சொன்னது போலவே பெயர் மாற்றம் செய்யப்பட்டு போஸ்டரும் வெளியானது. இப்படி ஒரு நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர், இது பண்டாரத்தி புராணம்தான். தயாரிப்பாளர்கள் வணிகத்துக்காக பெயரை மாற்றலாம். இது பண்டாரத்தி புராணமே. டேய் டொரண்டினோ என்று திரௌபதி இயக்குனர் மோகனின் ட்விட்டர் கணக்கையும் டேக் செய்து இருந்தார்.

-விளம்பரம்-
https://twitter.com/mohandreamer/status/1375248149485264901

இதற்கு பதில் அளித்த மோகன், அடேய் சவுக்கு.. இப்படியே ட்விட்டர்ல மட்டும் கதறுனா எப்படி.. தெருவுல இறங்கி தண்டோரா போடு.. நீ எவ்வளவு கதறுனாலும் வச்ச தலைப்புக்கான பதிலை மக்கள் திரையரங்குகளில் தர போறான்.. #திரெளபதி தாயை கேவலமா பேசுன வாய் மன்னிப்பு கேட்கும்.. திரெளபதியை வணங்குற ஒருத்தனும் உங்களை ஆதரிக்க மாட்டான் என்று கூறியுள்ளார்.

Advertisement