ஷாப்பிங் மாலில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை தூக்கி போட்டு உடைக்கும் பெண் – மோகன் பகிர்ந்த ஷாக்கிங் வீடியோ.

0
854
mohan
- Advertisement -

தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது ஆனால் பிரச்சினை காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது அதில் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட வேண்டுமென்றும் பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை என்றும் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இருப்பினும் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை வழக்கம்போல் கொண்டாட வேண்டும் என்று பல்வேறு இந்து முன்னணி அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் ஷாப்பிங் மால் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலை ஒன்றை படுதா போட்டிருக்கும் பெண் ஒருவர் ஒவ்வொன்றாக தூக்கிப் போட்டு உடைக்கும் வீடியோ ஒன்றை திரௌபதி பட இயக்குனர் மோகன் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

தமிழில் பழைய வண்ணாரப்பேட்டை துரோபதி போன்ற படங்களை இயக்கிய மோகன் திரௌபதி படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதுமட்டுமல்லாது சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மோகன் அடிக்கடி பல்வேறு சர்ச்சையான விடயங்களில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் ஷாப்பிங் மால் ஒன்றில் பெண்மணி ஒருவர் விநாயகர் சிலையை ஒவ்வொன்றாக தூக்கி போட்டு உடைக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மோகன்.

இந்த வீடியோவை பகிர்ந்துல்ல மோகன், இதெல்லாம் நல்லதா. மக்களுக்குள் பிளவை உண்டு பண்ணவே இதையெல்லாம் பண்றாங்க போல. அமைதி மார்க்கத்தில் இப்படியும் சில பக்தர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இந்த வீடியோ எடுக்கப்பட்டது அரபு நாட்டில் என்றும் இந்தியாவில் இந்த சம்பவம் நடைபெறவில்லை என்றும் இந்த வீடியோவிற்கு கீழ் ரசிகர்கள் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement