மற்ற நடிகைகளை போல ஒர்க் அவுட் வீடீயோவை வெளியிட்ட பகல் நிலவு சமீரா.

0
19646
sameera

உலகில் உள்ள மக்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. முதன் முதலாக இந்த வைரஸ் சீனாவில் தான் பரவ தொடங்கியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான்.

இந்தியாவில் 1024 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்றும், பல முன்னெச்சரிக்கைகள் உடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் இருப்பதால் தவித்து வருகின்றனர். வீட்டில் இருப்பதால் போர் அடிக்காமல் இருப்பதற்காக அனைவரும் புத்தகங்கள் படிப்பது, பெயிண்டிங் பண்ணுவது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, ஜோக்ஸ், மீம்ஸ், சமைப்பது மற்றும் சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்வது என்று பல விஷயங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதிலும் சில பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்களையும், புதுப்புது வீடியோக்களையும் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமீரா அன்வர் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். இது தான் அவரது முதல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இப்படி ஒவ்வொரு பிரபலங்களும் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக ஏதோ ஒரு விஷயத்தை செய்து சோசியல் மீடியாவில் பிசியாக இருந்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் இளசுகள் மத்தியில் படு பிரபலமடைந்தது. இந்த தொடரில் நடித்த அன்வர்– சமீரா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்கள். சின்னத்திரை தொடர்களில் காதல் ஜோடியாக வலம் வந்த அன்வர்– சமீரா தற்போது நிஜ வாழ்க்கையிலும் கணவன்-மனைவியாக வலம் வருகிறார்கள்.

அதற்கு பிறகு சமீரா சமீரா ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘றெக்க கட்டி பறக்குது மனசு’ என்ற தொடரை தயாரித்தும் அதில் ஹீரோயினியாகவும் நடித்து இருந்தார். இந்த தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs. சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்கள்.

Advertisement