விஜய் வரை சென்ற ரஞ்சிதமே Reels – விக்கல்ஸ் குழு நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட வீடியோ.

0
424
- Advertisement -

வரும் பொங்கலுக்கு தமிழ் மக்களுக்கு வாரிசு, துணிவு என்ற இரண்டு பொங்கல் பரிசுகள் கிடைக்கும் நிலையில் நேற்று விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தை ப்ரோமோஷன் செய்யும் வகையில் படக்குழு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த வகையில் வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விஜய்யின் குட்டி ஸ்டோரியை காண அவரின் ரசிகர்கள் பலர் மிகவும் ஆவலாக நேரு உள்அங்கத்தில் காத்துக்கொண்டிருந்தனர். மேலும் இந்த விழாவில் ரஷ்மிக மந்த, பிரகாஷ் ராஜ், குஷ்பு, சரத்குமார், யோகிபாபு, என பல நடிகர்களும் வாரிசு படக்குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 ஆயிரம் ரசிகர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியை நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி இருந்தனர். மற்ற எல்லா விஜய் பட இசை வெளியிட்டு விழாவில் கூறுவதை போலவே இந்த ஆடியோ வெளியிட்டு விழாவிலும் நடிகர் விஜய் கூறிய குட்டி ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யூடுயூப் மற்றும் இன்ஸ்டாவில் தற்போது பிரபலமாகி வரும் விக்கல்ஸ் சேனலின் ரீல்ஸ் வீடியோ குறித்து பேசி இருந்தார் விஜய்.

- Advertisement -

பிரமாண்ட படங்கள், பாடல்களுக்கு நடுவே, தீடிர் தீடிர் என சில காமெடி வீடியோக்கள் டரன்டிங்காவது வழக்கமாக ஆகிவிட்டது. அந்த வகையில் விக்கல்ஸ் யூடியூபினர் செம்ம நக்கல் அடித்து வெளியிட்ட ‘வாலி’ படத்தின் ‘நிலவைக் கொண்டு வா’ ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் படு பிரபலமானது. இந்த வீடியோவை பார்த்து ட்விட்டர் எஸ் ஜே சூர்யா கூட பாராட்டி தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

அதே போல இந்த பாடலை பாடிய உன்னி கிருஷ்ணன் கூட பாராட்டி இருந்தார் அதில் `நிலவைக் கொண்டு வா’ இன்ஸ்டா ரீல்ஸை எனக்கும் அனுப்பினார்கள்.இன்ஸ்டா ரீல்ஸை அழகா பண்ணிருக்காங்க. தேவாவின் இசைக்கும், அனுராதா ஶ்ரீராம் – உன்னிகிருஷ்ணன் துள்ளல் குரல்களுக்கு நிலாவே துள்ளிக்குதித்து வந்து டூயட் ஆடும் அளவுக்கு பாடியிருந்தார்கள். அதைப் பார்த்ததும் சந்தோஷமா சிரிச்சி ரசிச்சேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விக்கல்ஸ் சேனல் அடிக்கடி பல வைரல் பாடல்களை ரீல்ஸ் செய்து வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலை கூட ரீல்ஸ் செய்து இருந்தனர். அந்த வீடியோவை பற்றி தான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து விக்கல்ஸ் குழுவினரும் தங்கள் ரசிகர்களுக்கும் விஜய்க்கும் நன்றி தெரிவித்து இருக்கின்றனர்.

Advertisement