உலகின் முதல் அதிக பேட்டரி திறன் கொண்ட போன் அறிமுகம்.! 50 நாள் சார்ஜ் போட தேவை இல்லை.!

0
1701
Energiser-pop
- Advertisement -

தற்போது நாம் அனைவருமே ஸ்மார்ட்போன் எனப்படும் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தி வருகிறோம். இந்த போனில் பல அம்சங்கள் இருந்தாலும் நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை இந்த போனின் பேட்டரி தொல்லை தான்.

-விளம்பரம்-

பொதுவாக ஒரு ஆண்ட்ராய்டு போன் ஒருநாள் மட்டுமே பேட்டரி திறன் கொண்டவையாக இருக்கும் இந்தப் பிரச்சினையை சமாளிக்கும் விதத்தில் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் Mah திறன் அதிகம் கொண்ட போன்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்து வருகிறது.

- Advertisement -

அதேபோல ஒரு போன் பேட்டரி சராசரியாக ஒருநாள் மேல் வர பல மொபைல் நிறுவனங்களும் புதுப்புது யுத்திகளை கையாண்டு வருகிறது. இந்த நிலையில் இருந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக, கிட்டத்தட்ட ஒரு மாதம் சார்ஜ் நிற்கும் ஒரு புதிய போனை தற்போது அறிமுகம் செய்துள்ளனர்
Energizer என்ற மொபைல் நிறுவனம்.

Energizer Power Max P18K Pop என்ற ஒரு புதிய ரக போனை மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 (MWC 2019) நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 18,000Mah பேட்டரி கொண்ட போன் இந்த புதிய ரக போனது 30 மில்லி மீட்டர் தடிமனைக் கொண்டது. கிட்டத்தட்ட நாம் பயன்படுத்தும் சாதாரண போனை விட மூன்று முதல் நான்கு மடங்கு இந்த போனேன் தடிமனும் அதிகம்.

-விளம்பரம்-

மேலும்,இந்த போன் 6.2(ips) ஐ ஐ பி எஸ் திரையுடன் வருகிறது. இரண்டு சிம் பயன்பாட்டுடன் வரும் இந்த போன், 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6gb Ram உடன் வருகிறது அதேபோல 12 Depth Sensor உடன் வருகிறது. மேலும் செல்பி கேமராவை எடுத்துக்கொண்டால் விவோ போன்று Pop Up Camera போன்று 16 Mp Primary மற்றும் 2 Mp Depth Censor ருடன் வருகிறது. இந்த போனில் ஹெட்செட் பயன்படுத்த Port கிடையாது. மேலும், இந்த போனை பயன்படுத்தி நீங்கள் மற்ற போனையும் ஸ்டார்ட் செய்து கொள்ளும் வசதியுடன் இந்த போன் வருகிறது. இந்த போன் 30,000 ரூபாய்க்கு அறிமுகம் செய்ப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement