அத மட்டும் நிரூபிச்சா நான் நாட்ட விட்டே போயிடற – சந்தானத்திடம் சத்குரு சவால். வீடியோ இதோ.

0
1353
isha
- Advertisement -

கடந்த சில திங்களுக்கு முன்னர் ஈஷ யோகா நிறுவனர் சத்குரு கோவில்களை பற்றி போட்ட டீவீட்டுக்கு சந்தானம் ஆதரவு தெரிவித்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சத்குருவிற்கும் பெரிதாக அறிமுகம் தேவையில்லை ஆன்மீக சொற்பொழிவாளரான இவர் ஈஷா யோகா சிவன் சிலை மூலம் பெரும் பிரபலமடைந்தார். சத்குருவிற்கு சாமானிய மக்களை போல தமிழ் திரையுலகில் பல நடிகர் நடிகைகளும் பக்தர்கள் தான். சமீபத்தில் சதகுரு, இப்படி ஒரு நிலையில் சத்குரு, கோவில்களை பற்றி ட்வீட் ஒன்றைபோட்டு இருந்தார் . அதில், தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது.ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல என்று பதிவிட்டு நாட்டின் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை டேக் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

.சத்குருவின் இந்த ட்வீட் குறித்து நடிகர் சந்தானம் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், சத்குருவின் கருத்தை முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். பக்தர்களிடம் கோவில்களை விட்டுவிடுங்கள் என்று ட்வீட் போட்டிருந்தார். இதையடுத்து சந்தானத்தை பலரும் திட்டி தீர்த்து ட்வீட் போட்டனர்.இப்படி ஒரு நிலையில் சத்குருவுடன் பேட்டி ஒன்றில் பேசியுள்ள சந்தானம்,சத்குருவின் அந்த ட்வீட் எனக்கு சரி என்று பட்டது. ஆதரித்து நான் ட்வீட் போட்டேன். உடனே என்னையும் சங்கி என்று பலர் கமென்ட் செய்து திட்ட ஆரம்பித்தனர். ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்கள் என்று புலம்பினார் சந்தானம்.

இதையும் பாருங்க : நரைத்த முடி, வயதான தோற்றம் – சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்தியா இப்படி ஆகிட்டாரு பாவம்.

- Advertisement -

சத்குரு, ஈஷா யோகா மையம் திறக்கப்பட்ட போதே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. குறிப்பாக பல ஆயிரம் ஏக்கர் காடுகளை அழித்து தான் இந்த ஈஷா யோகா மையம் கட்டப்பட்டதாக பல எதிர்ப்புகள் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் சந்தானத்துடனான பேட்டியின் போது, சந்தானமும் இதுகுறித்து சத்குருவிடம் கேள்வியை கேட்டார். இதற்கு பதில் அளித்த சத்குரு, இதற்கு நான் நூறு முறை பதில் சொல்லி இருக்கிறேன் யார் யாரெல்லாம் எப்படிப் புகார் சொன்னாலும் அவர்கள் அனைவரையும் அழைத்தேன்.

ஆனால், ஒருவர் கூட வரவில்லை. ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக இப்படிப் பேசுகிறார்கள். நீங்கள் நேர்மையானவர் தானே ? நீங்கள் வாருங்கள் ஆசிரமத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள். தேவைப்பட்டால் வனத் துறை அதிகாரியை கூட அழைத்து வாருங்கள். வனத்துறைக்கு சொந்தமான இடத்தையோ அல்லது வேறு யாருடைய நிலத்தை யாவது ஒரு அங்குலமாவது நான் ஆக்கிரமித்து இருந்தால் தமிழகத்தை மட்டுமில்லை நாட்டை விட்டு சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement