வடிவேலுலாம் நடிகரே கிடையாது, அதுவும் அவர் நடிச்ச கோரப் பாய் கதை தெரியுமா ? எதிர்நீச்சல் மாரிமுத்து டுவிஸ்ட்.

0
1932
Marimuthu
- Advertisement -

வடிவேலு எல்லாம் ஒரு நடிகரே இல்லை என்று எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்கள் உரிமையை மையமாக கொண்ட கதை. தற்போது இந்த சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி வருபவர் நடிகர் மாரிமுத்து. சீரியலில் இவர் மதுரை ஸ்லாங்கில் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். இந்த சீரியலின் வெற்றிக்கு மாரிமுத்துவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -

மாரிமுத்து திரைப்பயணம்:

அதன் பின் மாரிமுத்து அவர்கள் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களின் நடித்து இருக்கிறார். தற்போது மாரிமுத்து சன் டிவியில் மிகப்பிரபலமான எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மாரிமுத்து அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

மாரிமுத்து குறித்த தகவல்:

அதில் அவர் கடந்து வந்த பாதை குறித்து கூறியிருந்தது, வடிவேலு ஒரு காமெடி நடிகராக தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் ஒரு நடிகரே கிடையாது. நிஜத்தில் அவர் ஒரு லெஜன்ட். கதை என்று வந்துவிட்டால் அவர் அப்படியே கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அதனாலேயே அவருடைய நடிப்புக்கு தனித்துவம் இருக்கிறது. எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போதும் நடிகன் என்று சொன்னால் அதை வடிவேலு தான் என்று கூறுவேன்.

-விளம்பரம்-

வடிவேலு குறித்து சொன்னது:

அவர் ரொம்ப வித்தியாசமானவர். சொல்லும் கதையை கச்சிதமாக புரிந்து கொண்டு அவருடைய உடல் மொழியோடு அதைப் பொருத்தி நடித்து விடுவார். அதனால் அவர் இன்னைக்கும் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அதனால் தான் அவர் இன்றைக்கும் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். எனக்கு பிடித்த நடிகர் என்றால் எப்போதும் அது வடிவேலு தான். வடிவேலு கூட நான் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வேலை பார்த்திருக்கிறேன். அந்த திரைப்படத்தை சீமான் தான் இயக்கியிருந்தார். அந்த படத்தின் போது சீமான் சொன்னதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு வடிவேலு அழகாக நடித்திருந்தார்.

பாஞ்சாலங்குறிச்சி பட அனுபவம்:

அந்த திரைப்படத்தில் இருந்த காமெடியை யாராலும் மறக்க முடியாது. அதுவும் வடிவேல் காமெடி இப்ப வரைக்கும் பேசப்படுகிறது என்றால் அது அவருடைய நடிப்பினால் தான் காரணம். குறிப்பாக ஓலைப்பாய் காமெடி பலருக்குமே பிடித்திருக்கு. உண்மையில் அந்த ஓலை பாய் கதையை எனக்கு சொன்னது என்னுடைய அம்மா தான். அதைத்தான் படத்தில் வைத்தோம். உண்மையில் அந்த காமெடியில் பாய் கிட்ட பேசும் போது இப்ப என்ன பண்ணுவ டி என்று வடிவேலு பேசுவது போல இருக்கும். ஆனால், வடிவேல அப்படி பேசாமல் டயலாக்கை வேற விதமாக பேசி இருப்பார் என்று கூறியிருந்தார்.

Advertisement